பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் தேசிய அளவில் தொழில்நுட்பக் கருத்தரங்கில் சாதனை

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

வல்லம், பிப்.8–- பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் இயந்திர வியல் மற்றும் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை மாணவர்கள், கும்பகோணத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 28.01.2026 அன்று நடைபெற்ற தேசிய அளவிலான தொழில் நுட்பக் கருத்தரங்கு (National level Technical Symposium) நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

தொழில்நுட்ப கட்டுரை வாசித்தலில் (Technical Paper Presentation) இயந்திரவியல் துறை மாணவர் செல்வன்
எஸ்.டி.அரிஹரன் “Precision Agriculture in Mechanical System” என்ற தலைப்பில் முதல் பரிசை பெற்றுள்ளார்.

மேலும் “திட்ட விளக்க காட்சி” (Project Presentation) என்ற போட்டியில் இயந்திரவியல் துறை மாணவர்கள் செல்வன் எஸ்.பிரதீப், எஸ்.சச்சின், எல்.அவினாஷ்   ஆகியோர் “Mini CNC Plotter” என்ற  தலைப்பில் முதல் பரிசும் மற்றும் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை மாணவர்கள் செல்வன் ஆர்.வெற்றிச் செல்வன், சி.குபேந்திரன் ஆகியோர் “Automatic Waste Segregation System” இரண்டாம் பரிசும் பெற்றனர்.  வெற்றி பெற்ற மாணவர்களுக்கு  பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ரொக்கப் பரிசுகளும் அரசு பாலிடெக்னிக் கல்லூரியின் சார்பில்  வழங்கப்பட்டது.

பாராட்டுச் சான்றிதழ்களும் மற்றும் ரொக்கப் பரிசுகளும் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்த மாணவர்களை பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் கே.பி.வெள்ளியங்கிரி, துணைமுதல்வர் முனைவர் க.ரோஜா, முதன்மையர் கோ.இராஜாராமன் மற்றும் துறைத் தலைவர்கள் பாராட்டினார்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *