வல்லம், பிப்.8- பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியும், சென்னை அய்.சி.டி அகாடமியும் (ICT Academy) இணைந்து நடத்திய இந்திய அரசின் தகவல் மற்றும் தொடர்பு தொழில் நுட்பத் துறையின் மூலம் 27.01.2026 முதல் 31.01.2026 வரை நடைபெற்ற பிசிபி டிசைன் (“PCB Design”) என்ற தலைப்பிலான ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சியின் துவக்க விழா 27.01.2026 அன்று காலை 10.00 மணியளவில் பெரியார் பாலிடெக்னிக்கில் நடைபெற்றது. பல்வேறு பாலிடெக்னிக் கல்லூரிகளிலிருந்து 27 பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
விழாவை துவக்கி வைத்து, பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் கே.பி.வெள்ளியங்கிரி தலைமை யுரையாற்றும் போது பிசிபி டிசைன் (PCB Design) துறையின் தொழில்துறை பயன்பாடுகள், அதன் முக்கியத்துவம் மற்றும் தற்போதைய தொழில்நுட்ப உலகில் அதன் வளர்ச்சி குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
திட்ட வரைவுரை யாற்றிய இக்கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் க.ரோஜா கூறுகையில் பயிற்சித் திட்டத்தின் உள்ளடக் கங்களை விளக்கமாக எடுத்துரைத்தார்.
இதில், Introduction to PCB Design, PCB Components and Design Tools, Schematic Design, PCB Layout Design & Advanced PCB Techniques ஆகிய தலைப்புகள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.
சிறப்புரையாற்றிய அய்.சி.டி. அகாடமியின் பயிற்றுநர் கே.பிரகதீஷ் குமார் பிசிபி டிசைன் (PCB Design) துறையின் நடைமுறை பயன்பாடுகள், தொழில்துறை சார்ந்த பயிற்சி அனுபவங்கள் மற்றும் தொழில்முறை வாய்ப்புகள் குறித்து பேசினார்.
அய்சிடி அகாடமி (ICT Academy)-யின் ரிலேசன்சிப் மேலாளர் எம்.வெங்கடேஷ் உரையாற்றும்போது அய்சிடி அகாடமி (ICT Academy) – கல்லூரி இணைப்பு, கல்வி வளர்ச் சிக்கான அதன் பங்களிப்பு மற்றும் எதிர்கால பயிற்சி வாய்ப்புகள் குறித்து விளக்கினார்.
இக்கல்லூரியின் கணினியின் துறைத் தலைவர் த.பிரியதர்ஷினி நன்றியுரை வழங்க விழா இனிதே நிறைவு பெற்றது.
இந்த 5 நாட்கள் பயிற்சி திட்டம் PPT sessions மற்றும் hands-on பயிற்சிகளுடன் சிறப்பாக நடத்தப்பட்டது. பிசிபி டிசைன் (PCB Design) பற்றிய விளக்கங்கள் எளிய முறையிலும் தெளிவாகவும் வழங்கப்பட்டன.
நடைமுறை பயிற்சிகள் மூலம் ஆசிரியர்கள் நேரடி அனுபவம் பெற்றனர். இந்த பயிற்சித் திட்டம் அவர்களின் தொழில்நுட்ப திறன் வளர்ச்சிக்கு பயனுள்ளதாக அமைந்தது.
