“என் கனவு என் எதிர்காலம்” என்ற புதிய இணையதளத்தின் வாயிலாக தமிழ்நாட்டு இளைஞர்களின் கனவுகளை பதிவு செய்ய அழைப்பு

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, பிப்.8- “என் கனவு என் எதிர்காலம்” என்ற புதிய இணையதளத்தின் வாயிலாக தமிழ்நாட்டு இளைஞர்களின் கனவுகளை பதிவு செய்ய தமிழ்நாடு அரசு அழைப்பு விடுத்துள்ளது.

தமிழ்நாட்டு மக்களின் எதிர்கால கனவுகள் மற்றும் தேவைகளைக் கண்டறிய, அவர்களது வசிப்பிடங்களுக்கே சென்று நேரடியாக கேட்டறிந்து, அதன் அடிப்படையில் புதிய திட்டங்களை தொடங்க, “உங்க கனவைச் சொல்லுங்க” என்ற திட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 9.01.2026 அன்று திருவள்ளூர் மாவட்டத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. ஒவ்வொரு குடும்பத்தின் கனவுகளை சேகரிப்பதுடன், இளைய தலைமுறையினரின் எண்ணங்களையும் அறிந்து அவர்களின் கனவுகளை சேகரிக்க, ‘என் கனவு என் எதிர்காலம்’ என்ற திட்டத்தினை செயல்படுத்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த திட்டத்தினை செயல்படுத்தி, இளைஞர்களின் கனவுகளை பதிவு செய்யும் பொருட்டு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மூலம், ‘என் கனவு என் எதிர்காலம்’ என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. 18 முதல் 29 வயதுக்குட்பட்ட தமிழ்நாடு முழுவதும் உள்ள இளைஞர்களிடமிருந்து கருத்துகளைப் பெறுவதற்காக, இளைஞர் கனவு இணையதளம் (Youth Dream Portal) தொடங்கப்படுகிறது. இளைஞர்கள் QR குறியீடு அல்லது enkanavu.tn.gov.in என்ற இணையத்தளம் மூலம் பதிவு செய்யப்படும் கனவுகளின் அடிப்படையில், 2030-ஆம் ஆண்டு தங்களது லட்சிய கனவுகளை திட்டமிட்டு அடைந்திட உதவிடும் வகையில், இளைஞர் நலனிற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு அவர்களின் எதிர்கால கனவுகள் நிறைவேற்றப்படும்.

“என் கனவு என் எதிர்காலம்” என்ற இப்புதிய இணையதளத்தின் வாயிலாக தமிழ்நாட்டு இளைஞர்களின் கனவுகளை பதிவு செய்து பயன்பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *