புதுச்சேரி, பிப். 8- இந்தியாவில் டில்லிக்கு அடுத்தபடியாக அனை வராலும் விரும்பப்படுகிற யூனியன் பிரதேசமாக புதுச்சேரி உள்ளது.
மிகச் சிறிய மாநிலமான இதன் எல்லையானது தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா என விரிந்தாலும் பரப்பளவோ குறைவுதான். புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாம் பிராந்தியங்களை உள்ளடக்கிய இந்த யூனியனில் தற்போது மொத்தம் 30 தொகுதிகள் உள்ளன.
ஆனால், பிரெஞ்சு ஆட்சிக் காலத்தில் 1946 மற்றும் 1955இல் பிரதிநிதித்துவ சட்டமன்றத் தேர்தல் நடந்தது. 1954ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி பிரெஞ்சு ஆட்சியிலிருந்து விடுதலை பெற்ற பின்னர், 1962இல் இந்தியாவுடன் புதுச்சேரி இணைந்தது. அன்று முதலே யூனியன் பிரதேசமாகவே இதுவரையும் புதுச்ேசரி தொடர்ந்தாலும் அவ்வப்போது ஆட்சிக் கவிழ்ப்புக்கு பஞ்சமில்லாத நிலை உள்ளது.
மிகச் சிறிய யூனியன் பகுதி என்பதாலோ என்னவோ இதுவரை 6 முறை ஆட்சிக் கவிழ்ப்பையும், 6 முறை குடியரசு தலைவரின் ஆட்சியும் புதுச்சேரியில் நடந்துள்ளது என்பது இதன் வரலாறு. 1974இல் ராமசாமி (அ.தி.மு.க.), 1977இல் ராமசாமி (அ.தி.மு.க.), 1980இல் ராமச்சந்திரன் (தி.மு.க..), 2000இல் ஜானகிராமன் (தி.மு.க.), 2001இல் சண்முகம் (காங்.), 2016 நாராயணசாமி (காங்.) ஆகிய ஆண்டுகளில் ஆட்சி கவிழ்ப்பை முதலமைச்சர்கள் சந்தித்தனர். ேமலும் 1968, 1973, 1974, 1978, 1984, 1991 காலங்களில் குடியரசு தலைவரின் ஆட்சியும் நடைபெற்றுள்ளன.
