ஆண்களும், பெண்களும் ஒரே மாதிரியாக லுங்கி கட்ட வேண்டும்; ஜிப்பா போட வேண்டும்; உடைகளில் ஆண் –_ பெண் வித்தியாசம் இருக்கக் கூடாது. ஒரே மாதிரி உடை என்று சொல்லுகிறபோது அனாவசியமான ஆடம்பரத்தை ஒழிக்கவேண்டும். ஆண்களைப் போலவே தாங்களும் ஆக வேண்டுமே என்றில்லாமல், வீண் அலங்காரம் செய்து கொண்டு திரிவது பெண் சமுதாயத்தின் கீழப் போக்குக்குத்தான் பயன்படும்.
(நூல்: “பெரியார் ஒரு வாழ்க்கை நெறி”)