அரூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையடலில் தீர்மானம்

Viduthalai
4 Min Read

அறிவியல் மனப்பான்மையை வளர்த்திட மூடநம்பிக்கை ஒழிப்பு தடை சட்டம் கொண்டு வந்து நடைமுறைப்படுத்த வேண்டும் 

 

அரசியல்

அரூர், ஏப். 18-  அரூர் மாவட்ட பகுத் தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் 15.4.2023 ஆம் சனிக் கிழமை மாலை 6 மணி அளவில் அரூர் திரு. வி. க. நகர் சிவராமன் கேஸ் ஏஜென்சி அலுவலகம் எதிரில் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் சா. இராஜேந்திரன் தலைமையில், மாவட்ட கழக தலைவர் கு.தங்கராஜ், மாவட்ட செயலாளர் பூபதி ராஜா, மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி மண்டல தலைவர் அ.தமிழ்ச்செல்வன், மாவட்ட ஆசிரியர் அணி செயலாளர் மு.பிர பாகரன்,ஆகியோர்  முன்னிலை ஏற்று கருத்துரை வழங்கினர்.

அரசியல்

மாவட்ட பகுத்தறிவு ஆசிரியர் அணி தலைவர் தீ.சிவாஜி அனை வரையும் வரவேற்று பேசினார். பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர் அண்ணா சர வணன், பகுத்தறிவாளர் கழக கலைத் துறை மாநில செயலாளர் மாரி கருணாநிதி  ஆகியோர் கூட்டத்தி னுடைய நோக்கத்தை எடுத்து ரைத்து தொடக்குறையாற்றினர். அதைத்தொடர்ந்து ஒன்றிய திமுக மேனாள் செயலாளர் தேசிங்கு ராஜன் ஜி.பானுப்பிரியா, வேல் விழி, பழனியம்மாள், மு பிரபாக ரன், மண்டல ஆசிரியரணி அமைப் பாளர் கிருஷ்ணமூர்த்தி,  மகளிர் அணி செயலாளர் கோகிலா நடராஜன்,  இராவணன் ஆகியோர் கருத்துரை ஆற்றினர்.இறுதியாக மாநில பகுத்தறிவாளர் கழகத் தலைவர் இரா. தமிழ்ச்செல்வன், மாநில பகுத்தறிவாளர் கழக பொதுச்செயலாளர் வி. மோகன், திராவிடர் கழக மாநில அமைப்புச் செயலாளர் ஊமை.ஜெயராமன் ஆகியோர் பகுத்தறிவாளர் கழகத் தின் நோக்கம், அமைப்பில் இணை வது,  பகுத்தறிவாளர்கள் கழகத்தின்  செயல்பாடுகள், உறுப்பினர் சேர்க்கை, போன்றவை குறித்து சிறப்புரையாற்றினர். 

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.

1. அரூர் மாவட்ட  பகுத்தறிவா ளர் கழகம் சார்பில் அரூர் நகரம், பாப்பிரெட்டிப்பட்டி ,கடத்தூர், மொரப்பூர், ஆகிய ஒன்றியங்களில் புதிய உறுப்பினர்களை பகுத்தறி வாளர்களாக இணைப்பது எனத் தீர்மானிக்கப்படுகிறது.

2. அரூர் கழக மாவட்டத்திற்கு உட்பட்ட கிளைக் கழகங்களில் உறுப்பினர்கள் சேர்ப்பதுடன் மற்றும் உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடான விடுதலைக்கு சந்தாக் களை  சேர்ப்பது என தீர்மானிக்கப் படுகிறது.

3. அறிவுலக பேராசன் தந்தை பெரியார் அவர்களின் முயற்சியால் 1924 ஆம் ஆண்டு கேரள மாநிலம் வைக்கத்தில் பார்ப்பனர் அல்லாத மக்கள் தெருக்களில் நடக்க உரிமை இல்லை என்பதை எதிர்த்து 604 நாட்கள் போராட்டத்திற்கு பின் அனைத்து ஜாதியை சேர்ந்த மக்க ளும் தெருக்களில் நடக்கலாம் என் கின்ற உரிமை தந்தை பெரியாரால் கிடைத்தது. அதன் சிறப்பை கொண்டாடும் வகையில்   நூற் றாண்டு வெற்றி விழா கருத்தரங்கம்   சிறப்பாக நடத்துவதென தீர்மா னிக்கப்படுகிறது.  

4. நவீன தமிழ்நாட்டின் சிற்பி என்றும் சுயமரியாதைக்காரர் என புகழப்படும்  முத்தமிழ் டாக்டர் கலைஞர் அவர்களின் பிறந்தநாள்  நூற்றாண்டு விழாவை ஜூன் மாதம் முழுவதும் அரூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் வெகு சிறப்பாக கொண்டாடப் படும் என தீர்மானிக்கப்படுகிறது.        

5. அறிவியல் மனப்பான்மை இல்லாமல் மூடநம்பிக்கையால் பெரிதும் மக்கள் பல்வேறு வகை யில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர் களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் வாழ்க்கையில்    தமிழ்நாடு அரசு மூடநம்பிக்கை ஒழிப்பு  சட்டத்தை கொண்டு வந்து நடைமுறைப்படுத் துமாறு தமிழ்நாடு அரசை அரூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் கேட்டுக்கொள்கிறது.              

5. அரூர் மாவட்ட பகுத்தறி வாளர் கழகத்தை மேலும் வளர்ச்சி அடைய அரூரில் முழு நேர அள வில் ஒரு நாள் பயிற்சி கருத்தரங்கை நடத்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.

பாராட்டு!

அரூர் பழைய பேட்டை அன்பு என்பவரின் மகள் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் கோபிகா என்ற மாணவி மல்யுத்த போட்டியில் கலந்து கொண்டு  அகில இந்திய அளவிலும் இரண்டாம் பரிசை வென்றுள்ளதால் மாணவியை பாராட்டி கை ஒலி எழுப்பி மாநில பகுத்தறிவாளர்கள் கழகத் தலை வர் இரா.தமிழ்ச்செல்வன், மாநில பகுத்தறிவாளர் கழக பொதுச் செயலாளர் வி.மோகன் ஆகியோர் பயனடை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர்.

இக்கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்றோர்

மண்டல இளைஞரணி செயலாளர் இ. சமரசம், மாவட்ட இளைஞரணி தலைவர் யாழ்திலீபன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தென்றல் பிரியன், மாவட்ட மாணவர் அணி தலைவர் அரிகரன், மாவட்ட மாணவர் கழகச் செயலாளர் சாய் குமார், கடத்தூர் ஒன்றிய பகுத்தறிவாளர் கழக தலைவர் பெ.அன்பழகன், குருபரஅள்ளி  ராஜேந்திரன், கடத் தூர் ஒன்றிய விடுதலை வாசகர் வட்ட தலைவர் வ.நடராஜன், வேப் பிலைப்பட்டி கொ.கண்ணப்பன், செம்மனள்ளி சுந்தரராஜன், கடத் தூர் தங்கராஜ், சரவணன், செந் தில்குமார், கவிஞர் பிரேம்குமார், ஒன்றிய திமுக முன்னாள் செய லாளர் தேசிங்குராஜன்,  வேல்விழி, மணிமேகலை, பாமா, கிருஷ்ணன், சண்முகம், குப்புசாமி, பிரசாத், ராதாகிருஷ்ணன், புஷ்பலிங்கம், பழனிவேல், செந்தில், இளங்கோ வன், மூக்கப்பன், ராஜ், ஜெய்சங்கர், ராமகிருஷ்ணன், பிலவங்கன், அன்பு, குரோஸ், ரஜினிகாந்த், குமரேசன், அருள், வேலுசாமி, பிரபாகரன், பகத்சிங் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *