பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
வேலூர், ஏப். 18- வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் கலந்துரையாடல் கூட்டம் 15.4.2023 சனிக்கிழமை காலை 10:30 மணிக்கு குடியாத்தம் புவ னேசுவரிப்பேட்டை, பெரியார் அரங்கில் நடைபெற்றது.
மாநில பகுத்தறிவாளர் கழக தலைவர் இரா.தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். பகுத்தறி வாளர் கழக பொதுச் செயலாளர் வெ.மோகன் முன்னிலை வகித்தார். கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
1. வேலூர் மய்யப் பகுதியில் அன்னை மணியம்மையார் அவர்களுக்கு விரைவில் சிலை வைப்ப தென முடிவு செய்யப்படுகிறது.
2. பகுத்தறிவாளர் கழகத் திற்கு அதிகப்படியான உறுப்பினர்களை சேர்ப்பது.
3. ஒன்றியங்களில் பகுத்தறிவாளர் கழக கிளை அமைப்புகளை தோற்றுவிப்பது.
4. வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக புதிய பொறுப்பாளர்கள் அறிவிப்பு – மா.அழகிரி தாசன் (வேலூர் மாவட்ட தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), பி.தனபால் (வேலூர் மாவட்ட செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்), பெ.சுப்பிரமணி (வேலூர் மாவட்ட அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்), விநாயகமூர்த்தி (மாவட்ட துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்)
வேலூர் மண்டல கழக தலைவர் வி.சடகோபன், மண்டல மகளிரணி செயலாளர் ந.தேன்மொழி, ச.ஈஸ் வரி, மாவட்ட கழக தலைவர் இர.அன்பரசன், மாவட்ட ப.க. தலைவர் மா.அழகிரிதாசன், மாவட்ட ப.க. செயலாளர் பி.தனபால், மாவட்ட ப.க. அமைப்பாளர் பெ.சுப்பிரமணி, பொதுக்குழு உறுப்பினர் வி.இ.சிவக்குமார், மாநகர கழக தலைவர் உ.விசுவநாதன், குடியாத்தம் நகர கழக தலைவர் சி.சாந்தகுமார், மாவட்ட மகளிர் பாசறை தலைவர் சி.லதா ஆகியோர் கலந்து கொண்டனர்.
வேலூர் மாவட்ட பகுத்தறி வாளர் கழக செயலாளர் பி.தனபால் நன்றி கூறினார்.