மதுரை,பிப்.7 தென்கலை நாமத்தை அகற்றி வடகலை நாமத்தை மீண்டும் நிறுவக் கோரி தொடர்ந்த மனுவை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்துள்ளது. தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள வல்லம் சிறீநரசிங்க பெருமாள் கோயில் குடமுழுக்கை வைகானச ஆகமத்தை பின்பற்றி நடத்த இடைக்காலத் தடை கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
வழக்குத் தொடர்ந்த கும்பகோணத்தைச் சேர்ந்த பத்ரி நாராயணன் என்பவருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ரூ.1 லட்சம் அபராதம் விதித்தது. கோயிலில் வடகலை முறை இருந்ததற்கான எந்த ஆவணமும் மனுதாரர் பத்ரி நாராயணன் அளிக்காமல், கடைசி நேரத்தில் நீதிமன்றம் வந்துள்ளதாகக் கூறி அபராதம் விதித்து அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
