கிருஷ்ணகிரி வருகை தந்த தமிழர் தலைவருக்கு திமுக நகர பொறுப்பாளர் (மேற்கு) அஸ்லாம் ரகுமான் ஷரீஃப், சட்டமன்ற தி.மு.க. மேனாள் உறுப்பினர் டி.செங்குட்டுவன், திமுக நகர பொறுப்பாளர் (கிழக்கு)
எம். வேலுமணி, மாநில கழக ஒருங்கிணைப்பாளர் ஊ. ஜெயராமன், மாவட்டக் கழக பொறுப்பாளர்கள் திராவிட மணி, பொன்முடி, கதிரவன், வனவேந்தன், செல்வம், திருப்பத்தூர் மாவட்டக் கழக பொறுப்பாளர்கள் கே.சி. எழிலரசன், கலைவாணன், தணிகை ஜி.கருணாநிதி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், கம்யூனிஸ்ட் இயக்கத் தோழர்கள் தமிழர் தலைவருக்குப் பயனாடை அணிவித்துப் புத்தகங்களை வழங்கினர்.

பெரியார் ஆசிரியர் பயிற்சி பள்ளியின் முன்னாள் மாணவர், கிருஷ்ணகிரி – தலைமை ஆசிரியர் இரா. சாய்ராம் புதிய மகிழுந்து வாங்கியதான் மகிழ்வாக தமிழர் தலைவரிடம் விடுதலை சந்தா வழங்கினார். தமிழர் தலைவர் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.*அண்ணா சரவணன் – இந்திரா காந்தி ஆகியோரின் 32 ஆவது மண நாளை ஒட்டி தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். * மேனாள் சட்டமன்ற உறுப்பினர் டி.செங்குட்டுவன் அவர்களின் பிறந்தநாளையொட்டி தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். பெரியார் பெருந்தொண்டர் சுப்பிரமணியன் அவர்களுக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார்.
