லெனின் கிரேட், பிப். 5– ரஷ்யாவுக்கு ஆதரவளிப்பதை சீனா நிறுத்த வேண்டும் என அய்ரோப்பிய நாடுகளின் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால், சீனா ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்து வந்தது. இதனால் மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவுக்குப் பொருளாதாரத் தடை விதித்தும் எந்தப் பலனும் இல்லை.
தற்போது அய்ரோப்பிய நாடுகளின் தலைவர்கள் சீனாவுடன் உறவை மேம்படுத்தி வருகின்றனர். இங்கிலாந்து மற்றும் கனடா பிரதமர்கள் கடந்த மாதம் சீனாவுக்குச் சென்றனர். ஜெர்மன் அதிபரும் இந்த மாதம் சீனா செல்லவுள்ளார்.
இந்நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும், ரஷ்ய அதிபர் புதினும் நேற்று (4.2.2026) காணொலி அழைப்பில் பேசினர். ரஷ்யா – உக்ரைன் இடையேயான போர் தொடர்பாக சீனாவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்பதை உறுதி செய்வதற்காக இவர்கள் பேசியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
ரஷ்யப் பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் செர்ஜி ஷோய்கு (Sergei Shoigu), கடந்த வாரம் பெய்ஜிங் சென்று சீன வெளியுறவுத்துறை அதிகாரி வாங் யீயைச் சந்தித்தார். உலகளவில் நிச்சயமற்ற சூழல் நிலவும் நிலையில், இரு நாடுகளும் நெருங்கிய உறவைப் பராமரிக்க அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
