வாசிங்டன், பிப். 5– இந்தியப் பொருட்களுக்கான இறக்குமதி வரி 18 சதவீதமாகக் குறைக்கப் படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் அமெரிக்க வெள்ளை மாளிகை ஊடகச் செய லாளர் கேரோலின் லீவிட் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“இந்தியா – அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப் பட்டுள்ளது. இதை ஒரு மிகப்பெரிய வெற்றியாக அமெரிக்கா பார்க்கிறது. இதைத் தொடர்ந்து, ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெயை வாங்குவ தில்லை என இந்தியா உறுதி அளித்துள்ளது. மேலும், அமெரிக்கா மற்றும் வெனிசுலா நாடுகளிடமிருந்து இனி கச்சா எண்ணெயை இந்தியா வாங்கும்.
ரஷ்யாவிடமிருந்து வாங்கப்படும் கச்சா எண்ணெயை நிறுத்துவ தோடு மட்டுமல்லாமல், அமெரிக்கப் பொருட்களை இறக்குமதி செய்யும் எண்ணிக்கையை அதிகரிக்கவும் இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது. வெனிசுலாவிடமிருந்தும் இந்தியா கச்சா எண் ணெயை வாங்க முடியும். இதனால் அமெரிக்கப் பொருளாதாரம் மேலும் பலன் அடையும்.
இந்தியாவுடன் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தத்தை அதிபர் ட்ரம்ப் இறுதி செய் துள்ளார். இதற்காக இந்தியப் பிரதமர் மோடியுடன் அவர் நேரடி யாகவே பேசியுள்ளார்.
மேலும், அமெரிக்க எரிசக்தி, போக்குவரத்து மற்றும் விவசாயப் பொருட்களை வாங்குவதற்காக இந்தியா 500 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்குச் செலவிடவுள்ளது,” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
