சிலம்பம், வாள்வீச்சு, தற்காப்பு, சதுரங்கப் போட்டிகளில் பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ-மாணவிகள் சாதனை!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

திருச்சி,, ஜன. 5– சிலம்பம், வாள்வீச்சு, தற்காப்பு, சதுரங்கப் போட்டிகளில் திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ-மாணவிகள் சாதனை படைத்தனர். அதன் விவரம் வருமாறு:

தமிழ்நாடு, திராவிடர் கழகம்

சிலம்பப் போட்டி

திருச்சியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டியில், பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ஆறாம் வகுப்பு மாணவர் ஏ.அஜ்மல் இரண்டு வெவ்வேறு பிரிவுகளில் பதக்கங்களை வென்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளார்.

தென்னிந்திய தற்காப்புக் கலை விளையாட்டுக் கழகம் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டச் சிலம்பாட்டக் கழகம் சார்பில், ‘ஓப்பன் சிலம்பம் சாம்பியன்ஷிப் – 2026’ போட்டிகள் கடந்த ஜனவரி 25 அன்று திருச்சி அரசு சையத் முர்துசா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றன.

இப்போட்டியில் 10 முதல் 14 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் பங்கேற்ற மாணவர் அஜ்மல், தனது திறமய்யான கம்பு வீச்சின் மூலம் நடுவர்களைக் கவர்ந்தார். விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டிகளின் முடிவில்:

‘ஒற்றைக் கம்பு’ வீச்சுப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இரண்டாம் இடத்தைப் (SECOND Place) பிடித்தார்.

‘இரட்டைக் கம்பு’ வீச்சுப் போட்டியில் தனது நுணுக்கமான திறமய்யால் மூன்றாம் இடத்தைப் (THIRD Place) பிடித்து சாதனை படைத்தார்.

வெற்றி பெற்ற மாணவருக்குப் பாராட்டுச் சான்றிதழ்களும், பதக்கங்களும் வழங்கப்பட்டன.

ஒரே போட்டியில் இரண்டு வெவ்வேறு பிரிவுகளில் பதக்கம் வென்ற மாணவர் அஜ்மலை, பள்ளியின் தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள், அலுவலகப் பணித் தோழர்கள் மற்றும் சக மாணவர்கள் பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

திருச்சி,, ஜன. 5- சிலம்பம், வாள்வீச்சு, தற்காப்பு, சதுரங்கப் போட்டிகளில் திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ-மாணவிகள் சாதனை படைத்தனர். அதன் விவரம் வருமாறு:

சிலம்பப் போட்டி

திருச்சியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டியில், பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ஆறாம் வகுப்பு மாணவர் ஏ.அஜ்மல் இரண்டு வெவ்வேறு பிரிவுகளில் பதக்கங்களை வென்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளார்.

தென்னிந்திய தற்காப்புக் கலை விளையாட்டுக் கழகம் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டச் சிலம்பாட்டக் கழகம் சார்பில், ‘ஓப்பன் சிலம்பம் சாம்பியன்ஷிப் – 2026’ போட்டிகள் கடந்த ஜனவரி 25 அன்று திருச்சி அரசு சையத் முர்துசா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றன.

இப்போட்டியில் 10 முதல் 14 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் பங்கேற்ற மாணவர் அஜ்மல், தனது திறமய்யான கம்பு வீச்சின் மூலம் நடுவர்களைக் கவர்ந்தார். விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டிகளின் முடிவில்:

‘ஒற்றைக் கம்பு’ வீச்சுப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இரண்டாம் இடத்தைப் (SECOND Place) பிடித்தார்.

‘இரட்டைக் கம்பு’ வீச்சுப் போட்டியில் தனது நுணுக்கமான திறமய்யால் மூன்றாம் இடத்தைப் (THIRD Place) பிடித்து சாதனை படைத்தார்.

வெற்றி பெற்ற மாணவருக்குப் பாராட்டுச் சான்றிதழ்களும், பதக்கங்களும் வழங்கப்பட்டன.

ஒரே போட்டியில் இரண்டு வெவ்வேறு பிரிவுகளில் பதக்கம் வென்ற மாணவர் அஜ்மலை, பள்ளியின் தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள், அலுவலகப் பணித் தோழர்கள் மற்றும் சக மாணவர்கள் பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

ஆரஞ்சு பெல்ட்

திருச்சியில் பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நான்காம் வகுப்பு பயின்று வரும் மாணவர் இ.பவன் தமிழர்களின் பாரம்பரிய தற்காப்புக் கலையான சிலம்பத்தில் சிறப்பிடம் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளார்.

திருச்சி எடமலைப்பட்டி புதூரில், 1969 முதல் தற்காப்புக் கலைகளைப் பயிற்றுவித்து வரும் தென்னிந்திய தற்காப்பு கலை பயிற்சி மய்யம், அண்மையில் சிலம்பத் தகுதித் தேர்வுகளை நடத்தியது. இந்தத் தேர்வில், மய்யத்தின் விதிகளுக்கு உட்பட்டு மாணவர் இ.பவன் தனது சிலம்பத் திறனை வெளிப்படுத்தினார்.

இவரது சிறப்பான செயல்பாட்டினை அங்கீகரிக்கும் வகையில், பயிற்சி மய்யத்தின் சார்பில் இவருக்கு ‘B’ கிரேடுடன் கூடிய ஆரஞ்சு பெல்ட் (ORANGE BELT IN SILAMBAM) வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ சான்றிதழ் கடந்த ஜனவரி 26, 2026 அன்று வழங்கப்பட்டது.

சிறு வயதிலேயே பாரம்பரியக் கலையில் ஆர்வம் காட்டி வெற்றி பெற்றுள்ள மாணவர் பவனுக்கு பள்ளியின் தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணித் தோழர்கள் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்ந்தனர்.

வாள்வீச்சுப் போட்டி

தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்ட 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான பாரதியார் தின மற்றும் குடியரசு தின மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில், திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி வாள்வீச்சுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை புரிந்துள்ளார்.

காஞ்சிபுரம் எஸ்.டி.ஏ.டி மைதானத்தில் கடந்த ஜனவரி 22 முதல் 25 வரை இப்போட்டிகள் நடைபெற்றன. இதில் மாநில அளவில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிறந்த வீராங்கனைகள் பங்கேற்றனர். இப்போட்டியில் 14 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில், வாள்வீச்சு – சேபர் டீம் விளையாட்டில் திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் எட்டாம் வகுப்பு மாணவி எஸ். தீபிகா பங்கேற்றார்.

திறம்பட விளையாடிய மாணவி தீபிகா, மாநில அளவில் இரண்டாம் இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கம் மற்றும் சான்றிதழைப் பெற்றுள்ளார்.

சிறு வயதிலேயே வாள்வீச்சு போன்ற சவாலான விளையாட்டில் மாநில அளவில் முத்திரை பதித்த மாணவி எஸ். தீபிகாவை, பள்ளி நிர்வாகம் வெகுவாகப் பாராட்டியுள்ளது. கல்வியோடு விளையாட்டுத் துறையிலும் சிறந்து விளங்கும் இம்மாணவியின் முயற்சிக்குத் துணையாக இருந்த பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர்கள் என்.கோகுல் மற்றும் எஸ்.சவுமியா ஆகியோருக்கும் பள்ளியின் சார்பில் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.

டேக்வாண்டோ போட்டி

தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்ட 2025-2026 ஆம் ஆண்டிற்கான பாரதியார் தின மற்றும் குடியரசு தின மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில், திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் மாநில அளவில் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

மதுரையில் உள்ள என்.எம்.எஸ். சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லூரியில் கடந்த ஜனவரி 22 முதல் 25 வரை இந்தப் போட்டிகள் நடைபெற்றன. இதில் டேக்வாண்டோ (Taekwondo) தற்காப்புக் கலைப் போட்டியில், 14 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில், 27-29 கிலோ எடைப் பிரிவின் கீழ் திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு பள்ளியின் ஒன்பதாம் வகுப்பு மாணவர் கே. சிறீசஞ்சய்ராம் பங்கேற்றார்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த வீரர்களுக்கு ஈடுகொடுத்து, தனது சிறப்பான தற்காப்புத் திறனை வெளிப்படுத்திய மாணவர் சிறீசஞ்சய்ராம், மாநில அளவில் மூன்றாம் இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

மாநில அளவிலான இப்போட்டியில் வெற்றி பெற்று பள்ளிக்கும் திருச்சி மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்த மாணவரை, பள்ளியின் நிர்வாகம், முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணித் தோழர்கள் பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

சதுரங்கப் போட்டி

சதுரங்கப் போட்டியில் திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி ஜானவி போஷிகா சிறப்பிடம்.

திருச்சியில் உள்ள கிராம்னிக் செஸ் அகாடமி (Kramnick Chess Academy) சார்பில் கடந்த 1.2.2026 அன்று நடைபெற்ற மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டியில், பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி எஸ். ஜானவி போஷிகா கலந்துகொண்டார்.

இப்போட்டியில், 15 வயதிற்குட்பட்டோருக்கான (U-15) திறந்தநிலைப் பிரிவின் கீழ் இவர் பங்கேற்றார். மொத்தம் நடைபெற்ற நான்கு சுற்றுகளில், இவர் 2.5 புள்ளிகளைப் பெற்று ஒன்பதாம் இடத்தைப் பிடித்தார்.

இவரது ஆர்வத்தையும் முயற்சியையும் பாராட்டி, அகாடமி நிர்வாகம் இவருக்குச் சான்றிதழ் வழங்கிச் சிறப்பித்தது. விளையாட்டுத் துறையில் ஈடுபாடு காட்டி வரும் இம்மாணவியைப், பள்ளியின் தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணித் தோழர்கள் பாராட்டி மகிழ்ந்தனர்.திருச்சியில் பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நான்காம் வகுப்பு பயின்று வரும் மாணவர் இ.பவன் தமிழர்களின் பாரம்பரிய தற்காப்புக் கலையான சிலம்பத்தில் சிறப்பிடம் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளார்.

திருச்சி எடமலைப்பட்டி புதூரில், 1969 முதல் தற்காப்புக் கலைகளைப் பயிற்றுவித்து வரும் தென்னிந்திய தற்காப்பு கலை பயிற்சி மய்யம், அண்மையில் சிலம்பத் தகுதித் தேர்வுகளை நடத்தியது. இந்தத் தேர்வில், மய்யத்தின் விதிகளுக்கு உட்பட்டு மாணவர் இ.பவன் தனது சிலம்பத் திறனை வெளிப்படுத்தினார்.

இவரது சிறப்பான செயல்பாட்டினை அங்கீகரிக்கும் வகையில், பயிற்சி மய்யத்தின் சார்பில் இவருக்கு ‘B’ கிரேடுடன் கூடிய ஆரஞ்சு பெல்ட் (ORANGE BELT IN SILAMBAM) வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ சான்றிதழ் கடந்த ஜனவரி 26, 2026 அன்று வழங்கப்பட்டது.

சிறு வயதிலேயே பாரம்பரியக் கலையில் ஆர்வம் காட்டி வெற்றி பெற்றுள்ள மாணவர் பவனுக்கு பள்ளியின் தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணித் தோழர்கள் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்ந்தனர்.

வாள்வீச்சுப் போட்டி

தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்ட 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான பாரதியார் தின மற்றும் குடியரசு தின மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில், திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி வாள்வீச்சுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை புரிந்துள்ளார்.

காஞ்சிபுரம் எஸ்.டி.ஏ.டி மைதானத்தில் கடந்த ஜனவரி 22 முதல் 25 வரை இப்போட்டிகள் நடைபெற்றன. இதில் மாநில அளவில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிறந்த வீராங்கனைகள் பங்கேற்றனர். இப்போட்டியில் 14 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில், வாள்வீச்சு – சேபர் டீம் விளையாட்டில் திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் எட்டாம் வகுப்பு மாணவி எஸ். தீபிகா பங்கேற்றார்.

திறம்பட விளையாடிய மாணவி தீபிகா, மாநில அளவில் இரண்டாம் இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கம் மற்றும் சான்றிதழைப் பெற்றுள்ளார்.

சிறு வயதிலேயே வாள்வீச்சு போன்ற சவாலான விளையாட்டில் மாநில அளவில் முத்திரை பதித்த மாணவி எஸ். தீபிகாவை, பள்ளி நிர்வாகம் வெகுவாகப் பாராட்டியுள்ளது. கல்வியோடு விளையாட்டுத் துறையிலும் சிறந்து விளங்கும் இம்மாணவியின் முயற்சிக்குத் துணையாக இருந்த பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர்கள் என்.கோகுல் மற்றும் எஸ்.சவுமியா ஆகியோருக்கும் பள்ளியின் சார்பில் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.

டேக்வாண்டோ போட்டி

தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்ட 2025-2026 ஆம் ஆண்டிற்கான பாரதியார் தின மற்றும் குடியரசு தின மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில், திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் மாநில அளவில் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

மதுரையில் உள்ள என்.எம்.எஸ். சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லூரியில் கடந்த ஜனவரி 22 முதல் 25 வரை இந்தப் போட்டிகள் நடைபெற்றன. இதில் டேக்வாண்டோ (Taekwondo) தற்காப்புக் கலைப் போட்டியில், 14 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில், 27-29 கிலோ எடைப் பிரிவின் கீழ் திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு பள்ளியின் ஒன்பதாம் வகுப்பு மாணவர் கே. சிறீசஞ்சய்ராம் பங்கேற்றார்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த வீரர்களுக்கு ஈடுகொடுத்து, தனது சிறப்பான தற்காப்புத் திறனை வெளிப்படுத்திய மாணவர் சிறீசஞ்சய்ராம், மாநில அளவில் மூன்றாம் இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

மாநில அளவிலான இப்போட்டியில் வெற்றி பெற்று பள்ளிக்கும் திருச்சி மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்த மாணவரை, பள்ளியின் நிர்வாகம், முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணித் தோழர்கள் பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

சதுரங்கப் போட்டி

சதுரங்கப் போட்டியில் திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி ஜானவி போஷிகா சிறப்பிடம்.

திருச்சியில் உள்ள கிராம்னிக் செஸ் அகாடமி (Kramnick Chess Academy) சார்பில் கடந்த 1.2.2026 அன்று நடைபெற்ற மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டியில், பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி எஸ். ஜானவி போஷிகா கலந்துகொண்டார்.

இப்போட்டியில், 15 வயதிற்குட்பட்டோருக்கான (U-15) திறந்தநிலைப் பிரிவின் கீழ் இவர் பங்கேற்றார். மொத்தம் நடைபெற்ற நான்கு சுற்றுகளில், இவர் 2.5 புள்ளிகளைப் பெற்று ஒன்பதாம் இடத்தைப் பிடித்தார்.

இவரது ஆர்வத்தையும் முயற்சியையும் பாராட்டி, அகாடமி நிர்வாகம் இவருக்குச் சான்றிதழ் வழங்கிச் சிறப்பித்தது. விளையாட்டுத் துறையில் ஈடுபாடு காட்டி வரும் இம்மாணவியைப், பள்ளியின் தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணித் தோழர்கள் பாராட்டி மகிழ்ந்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *