5.2.2026
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* ‘எங்களுக்கு எங்குமே நீதி கிடைப்பதில்லை’ – எஸ்அய்ஆர் வழக்கில் உச்ச நீதிமன்றத்திடம் மம்தா முறையீடு: வாக்காளர் தீவிர திருத்த பணி விவகாரத்தில் மூடிய கதவுகளுக்கு பின்னால் நீதி கதறுகிறது: உச்ச நீதிமன்றத்தில் ஆஜரான மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா குற்றச்சாட்டு.
* மக்களவையில் பெரும் பரபரப்பு; பிரதமர் மோடியின் இருக்கையை சூழ்ந்து பெண் எம்பிக்கள் ஆவேசம்: பதில் உரையை ரத்து செய்து விட்டு கிளம்பினார்.இந்திய-அமெரிக்க ஒப்பந்தம், எல்லை பிரச்சனை, 8 எம்பிக்கள் இடைநீக்கம் விவகாரம்; உண்மையை கண்டு ஒன்றிய அரசு பயப்படுகிறது: பிரதமர் மோடிக்கு எதிராக எதிர்க்கட்சி எம்பிக்கள் போர்க்கொடி.
* துணைவேந்தர்களை அரசே நியமனம் செய்யும் விவகாரம் உயர்நீதிமன்றம் விதித்த தடை ரத்து: உச்ச நீதிமன்றம் அதிரடி வழக்கை ஆறு வாரத்தில் முடிக்கவும் ஆணை.
* நாட்டுப் பாதுகாப்பு குறித்து பேச மோடி அரசு மறுக்கிறது, ராகுல் குற்றச்சாட்டு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ஒரு கோடி தமிழ்நாட்டு வாக்காளர்கள் உயிருள்ள பிணங்களாக மாறக்கூடும்: எஸ்அய்ஆர் குறித்து கமல்ஹாசன் மாநிலங்களவையில் கன்னிப் பேச்சு. “ஜனநாயக இந்தியா என்ற இந்த மாபெரும் சக்தி தொடர்ந்து முன்னோக்கிச் செல்லும்” என்று கூறிய அவர், உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அவையை வலியுறுத்தினார்.
தி இந்து:
* மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியின் இரண்டாம் கட்டம் தொடங்குவதற்கு முன்பு, ஜாதி குறித்த கேள்விகள் அறிவிக்கப்படும் என்று திமுக எம்.பி. சல்மாவின் கேள்விக்கு உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் எழுத்துப்பூர்வ பதிலில் தெரிவித்தார்.
* இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிராக மாபெரும் விவசாயிகள் போராட்டங்கள் வெடிக்கும் என்று மாநிலங்களவையின் எதிர்க் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே எச்சரிக்கை.
* டி.என்.டி எனும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் அல்லாத சமூகத்தினர் அரசியலமைப்பு அங்கீகாரம், தனி மக்கள் தொகை கணக்கெடுப்புப் பதிவு வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
தி டெலிகிராப்:
* ஜாதி மற்றும் மத அடிப்படையிலான பேரணிகளை தடுக்கவோ அல்லது கட்சிகளின் பதிவை ரத்து செய்யவோ தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை என லக்னோ உயர் நீதிமன்றம் தீர்ப்பு.
– குடந்தை கருணா
