சென்னை, பிப்.5 ஒன்றிய அரசை கண்டித்து நாடு முழுவதும் வருகிற 12-ஆம் தேதி ஒரு நாள் வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.
மத்திய தொழிற்சங்கங்கள் சி.அய்.டி.யு, ஏ.அய்.டி.யு.சி, அய்.என்.டி.யூ.சி, எல்.பி.எப். உள்ளிட்ட 12 தொழிற் சங்கங்கள் இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.
தொழிலாளர்களுக்கு எதிராக ஒன்றிய அரசு கொண்டு வந் துள்ள சட்டங்களை கண்டித்து போராட் டம் நடக்கிறது. தொழிலாளர் நலச் சட்டம் அனைத்தையும் கார்ப் பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக 4 ஆக சுருக்கி லேபர் கோடு என்று அமைக்கப்பட்டு சட்டங்கள் இருப்பதை கண்டிக்கும் வகையில் போராட் டத்தை தொழி லாளர்கள், விவசாயிகள் நடத்த திட்டமிட்டு உள்ளனர்.
சுமார் 25 கோடி தொழிலாளர் கள் இந்த வேலை நிறுத்த போராட் டத்தில் கலந்து கொள்ள உள்ளனர்.
அஞ்சல் துறை, இன்சூரன்ஸ், வங்கிகள், தணிக்கை துறை உள் ளிட்ட பல்வேறு துறை ஊழியர்கள் இதில் கலந்துகொள்ள தயாராகி வருகின்றனர்.
தொழிலாளருக்கு விரோதமாக கொண்டு வரப்பட்டுள்ள சட்டத்தை எதிர்த்து தமிழ்நாட்டில் உள்ள அரசு ஊழியர் சங்கங்கள் உள்ளிட்ட சில சங்கங்களும் இப்போராட்டத்திற்கு ஆதரவளித்து களத்தில் இறங்க உள்ளன.
12-ஆம் தேதி அண்ணா சாலை யில் உள்ள அஞ்சல் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டமும் நடத்த திட்டமிட்டு இருப்பதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
