பா.ஜ.க.வுக்கு ரூ.10 ஆயிரம் கோடி வைப்புத்தொகை எங்கிருந்து வந்தது? சி.பி.எம். மாநில செயலாளர் சண்முகம் கேள்வி

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சிறீவில்லிபுத்தூர், பிப்.5 சிறீவில்லிபுத்தூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நிதி அளிப்பு மற்றும் அரசியல் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாநில செயலாளர் சண்முகத்திடம் ரூ.45.60 லட்சத்தை மாவட்ட நிர்வாகிகள் வழங்கினர். அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

ஏற்றுமதி முடக்கம்

மக்கள் எதிர்நோக்கியுள்ள எந்த பிரச்சினைக்கும் தீர்வு சொல் லும் வகையில் பட்ஜெட்டில் எதுவுமில்லை. வேலையின்மை இந்தியாவின் தலையாய பிரச்சினை யாக உள்ளது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அபரிமிதமான வரி விதிப்பு காரணமாக இந்தியாவில் பல்வேறு தொழில்கள் மற்றும் ஏற்றுமதி தொழில்கள் முடங்கக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.

தொழில் முடக்கம் காரணமாக லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழப்பு, பொருளாதாரத்தில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அமெரிக்கா அத்துமீறல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள தொழில்களை, தொழிலாளர்களை பாதுகாப்பதற்கான எந்த ஆலோசனையும் நிதிநிலை அறிக்கையில் இல்லை.

125 நாட்கள் வேலை உயர்வு திட்டத்தை புதிதாக அமல்படுத்தி விட்டு அதற்காக ரூபாய் 95 ஆயிரம் கோடி மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நான்கு லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தால் மட்டுமே அந்த திட்டத்தில் 125 நாட்கள் வேலை வழங்க முடியும். 125 நாட்கள் வேலை திட்டத்தை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உற்சாகமாக வரவேற்றார். அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் 150 நாட்கள் வேலை வழங்கப்படும் என தெரிவித்தார்.

தற்போது ஒதுக்கப்பட்டு உள்ள நிதியில் இருந்து 30 நாட்கள் கூட வேலை வழங்க முடியாது. கிராமப்புற ஏழை மக்களை ஏமாற் றுவதில் பா.ஜ.க.வும் அ.தி.மு.க.வும் கூட்டணி சேர்ந்துள்ளார்கள்.

 

பட்ஜெட்டில் மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டம் பற்றி அறிவிப்பு இல்லை. ஓசூரில் விமான நிலையம் அமைவதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து பெங்களூரு மற்றும் அய்தராபாத்துக்கு புல்லட் ரயில் இயக்கப்படும் என தெரிவித்துள்ளனர். ஏற்கனவே விட்ட புல்லட் ரயில் விபத்துக் குள்ளாகி நிற்கிறது. தமிழ்நாட்டிற்கு என அறிவிக்கப்பட்ட ஒரே அறி விப்பு என்பது புல்லட் ரயில் திட்டம் மட்டுமே. அதை அறிவித்த படி நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

ஓசூர் விமான நிலையம் மெட்ரோ ரயில் திட்டங்கள் போன்றவை ஒட்டுமொத்த மாநிலத்தின் வளர்ச்சியோடு சம்பந்தப்பட்டது. தமிழ்நாடு அரசை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு பா.ஜ.க. அரசு செய்து கொண்டிருக்கிறது. பா.ஜ.க. அல்லாத மாநில அரசாங்கங்களை பழி வாங்குவது என்ற நோக்கத்தில் தான் தமிழ்நாடு, கேரளா, கருநாடகா போன்ற மாநிலங்களுக்கு விரோதமான அணுகுமுறையையும், பழிவாங்கும் போக்கையும் கடைபிடிக்கிறார்கள். அதன் வெளிப்பாடுதான் இந்த திட்டங்களுக்கு எல்லாம் அனுமதி மறுப்பதும் நிதி ஒதுக்கீடு செய்ய மறுப்பதும். தி.மு.க. கூட்டணி தற்போது வலிமையாக உள்ளது. மற்ற கட்சிகளை இணைப்பது குறித்து தி.மு.க. தான் முடிவு செய்ய வேண்டும். இந்த விசயத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலையிடாது.

இன்று இந்தியாவில் ரூ.10 ஆயிரம் கோடி வைப்புத்தொகை வைத்துள்ள ஒரே கட்சி பா.ஜ.க. தான். இந்த தொகை எங்கிருந்து அவர்களுக்கு வந்தது. கம்யூனிஸ்டுகளுடன் கடுகளவு கூட ஒப்பிட அருகதை இல்லாத கட்சி பா.ஜ.க.

இவ்வாறு அவர் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *