சென்னை, ஏப்.19- சட்டப் பேர வையில் சுகாதாரத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று (18.4.2023) நடைபெற்றது. விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசினார். அப்போது அவர் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசிய தாவது:
அனைத்து அரசு மருத்துவ மய்யங்களில் ஆய்வக சேவைகள் ரூ.185.24 கோடியில் மேம்படுத்தப் படும். மருத்துவம் சார்ந்த 4,133 காலிப் பணியிடங்கள் தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வா ணையம் (எம்ஆர்பி) மூலம் நிரப்பப்படும்.
‘நடப்போம் நலம் பெறுவோம்’ எனும் நோக்கத்தில் தமிழ் நாட்டின் அனைத்து மாவட்டங் களிலும் 8 கி.மீ. தொலைவு கொண்ட நடைபாதை கண்ட றியப்பட்டு, உள்ளூர் மக்களுடன் இணைந்து மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை ‘சுகாதார நடைப்பயிற்சி’ மேற்கொள்ளப் படும். அப்போது, சிறப்பு மருத்துவ முகாம்களும் நடத்தப் படும்.
கிராமப்புறங்கள் மற்றும் நகர் புறங்களில் உள்ள 2,286 ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரூ.10.17 கோடியில் கண்காணிப்பு (சிசிடிவி) கேமராக்கள் அமைக்கப்படும்.
மாரடைப்பால் ஏற்படும் உயிரி ழப்பை தடுக்க, இருதய பாது காப்பு மருந்துகள் வழங்கப்படும்.
சென்னை கிண்டி கிங் நோய் தடுப்பு ஆராய்ச்சி நிலைய வளா கத்தில் அமைந்துள்ள கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துவ மனைக்கு ரூ.146.52 கோடியில் நவீன மருத்துவ உபகரணங்கள் வழங்கப்படும்.
சென்னை அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.64.90 கோடியில் புதிய மாண வியர் விடுதி கட்டப்படும்.
அரசு மருத்துவமனைகள், ஆரம்ப மற்றும் துணை சுகாதார நிலையங்கள், நலவாழ்வு மய்யங் கள், சித்தா, ஓமியோபதி, ஆயுர் வேத மருத்துவ நிலையங்களில் ரூ.917.68 கோடியில் புதிய மருத் துவக் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும்.
ரூ.298.95 கோடியில் அரசு மருத் துவமனைகளுக்கு சிடி, எம்.ஆர்.அய். ஸ்கேன் உள்ளிட்ட உயிர் காக்கும் நவீன உபகரணங்கள் வழங்கப்படும்.
தாய்-சேய் நல சேவை திட்டங்கள் ரூ.43.41 கோடியில் மேம்படுத்தப்படும்.
நகராட்சி, மாநகராட்சிகளில் பணிபுரியும் 60,587 தூய்மைப் பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை மற்றும் சிறப்பு முகாம் நடத்தப்படும்.
தூய்மைப் பணியாளர்கள் நலன் கருதி அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தனி அறை அமைத்து தரப்படும்.
ஒருங்கிணைந்த ஆய்வகக் கட்டமைப்புகள், கருவிகள் ரூ.304.12 கோடியில் மருத்துவனைகளுக்கு வழங்கப்படும்.
போதை மீட்பு சேவைகள் தேவைப்படும் பகுதிகளை கண்டறிந்து, உரிய மனநல ஆலோசனை மற்றும் புனர் வாழ்வு சேவைகள் அனைத்து நிலை மருத்துவமனைகளிலும் கிடைக்க ஏதுவாக ரூ.523 கோடி யில் கட்டமைப்பு வலுப்படுத் தப்படும்.
மேலும், ரூ.21.4 கோடியில் 62 புதிய 108 அவசர கால ஊர்திகள்,13 தாய்-சேய் ஊர்திகள் மற்றும் 92 நவீன மருத்துவக் கருவிகள் வழங் கப்படும் என்பன உட்பட 106 அறிவிப்புகளை அமைச்சர் வெளியிட்டார்.