ஆசிரியருக்குக் கடிதம்

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

தங்களது கைப்பேனாவாளால் என் நூல்
பாராட்டும், வாழ்த்தும் பெற்றுவிட்டது!

27.1.2026 – ‘விடுதலை’யின் ஏட்டின் இரண் டாம் பக்க ‘வாழ்வியல் சிந்தனைகள்’ கட்டுரை வரிசையில் – ‘பெரியார் பற்றிய சிறப்பான நூல் ஒன்று இதோ’ எனத் தலைப்பிட்டு, எனது ‘பெரியார் என்னும் பேரொளி’ நூலுக்கு, தங்கப்பதக்கம் ஒன்று அணிவித்துள்ளீர்கள். ‘கடை விரித்தேன், கொள்வாரில்லை’ என வள்ளலார் வருந்திய வண்ணமே, நானும் கொஞ்சம் நெஞ்சம் கலங்கி யிருந்தேன். நம் எழுத்து போதிய வீரியமின்றி வாடிக் கிடக்கிறதோ என்று வருந்தியிருந்தேன். எழுத்து வளத்தில், வன்மையில் பற்றாக்குறையோ என, சற்றே மனபலவீனம் என்னும் சிறையில் அடைபட்டுக் கிடந்தேன். எனக்கு ‘விடுதலை’, தங்களது பேனா வழியாக விடுதலை வழங்கி விட்டது. மனச் சிறையிலிருந்து முழு ‘விடுதலை’ பெற்று விட்டேன்!

அய்யா, தாங்கள் தந்தை பெரியாரின் வழித்தோன்றல்!   அவர் விட்டுச் சென்ற இமாலயப் பணியை இமைப் பொழுதும் சோராமல் செய்து வரும் செம்மல் தாங்கள்! தங்களது கைப்பேனாவாளால் என் நூல் பாராட்டும், வாழ்த்தும் பெற்றுவிட்டது!

நன்றி அய்யா! ஆயிரமாயிரம் நன்றிகள்!

– மு. பாலசுப்பிரமணியன், சின்னமனூர்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *