சென்னை,ஏப்.19– தமிழ்நாடு சட் டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடை பெற்று வருகிறது. கடந்த 17.4.2023 அன்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மானியக் மீதான விவாதம் நடைபெற்றது. இதில் அமைச்சர் கீதா ஜீவன் 17 புதிய அறிவிப்புகளை வெளியிட் டுள்ளார்.
அதன் விவரம் வருமாறு:-
17,312 அரசு பள்ளி சத்துணவு மய்யங்களுக்கு ரூ.25.70 கோடி செலவில் புதிய சமையல் உபகர ணங்கள் வழங்கப் படும்.
சமூக நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் சத்துணவுத் திட்டம், உள்ளகப் புகார்க் குழுக்கள், கைம் பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம் ஆகியவற்றின் செயல்பாடுகளை துரிதப்படுத்தவும், கண்காணிக் கவும் ரூ.50 லட்சம் செலவினத்தில் இணையதள முகப்பு மற்றும் கைப்பேசி செயலிகள் உருவாக்கப் படும்.
சத்தியவாணி முத்து அம்மை யார் நினைவு தையல் எந்திரம் வழங்கம் திட்டத்தின் கீர் நவீன உயர்ரக தையல் இயந்திரங்கள் வழங்கப்படும்.
முதலமைச்சரின் பெண் குழந் தைகள் பாதுகாப்புத் திட்டம் மறுசீரமைக்கப்படும்.
6 வயதுக்குட்பட்ட குழந்தை களின் வளர்ச்சியினை கண்கா ணித்து நிகழ்நேர பதிவு மேற் கொள்ள ஏதுவாக 18,573 அங்கன் வாடி பணியாளர்களுக்கு ரூ.17.53 கோடியில் திறன் கைப்பேசிகள் வழங்கப்படும்.
குழந்தைகளின் வளர்ச்சியைக் கண்காணிக்கும் வகையில் 18,573 குழந்தைகள் மய்யங்களுக்கு ரூ.14.85 கோடி செலவில் வளர்ச்சிக் கண்காணிப்புக் கருவிகள் வழங்கப் படும்.
இராமநாதபுரம் மற்றும் விருது நகர் மாவட்டங்களில் தேர்ந்தெடுக் கப்பட்ட 700 குழந்தைகள் மய்யங் களுக்கு கற்றல் திறன்களை ஊக்கப் படுத்துவதற்கு எல்.இ.டி தொலை காட்சி பெட்டிகள் ஒரு மய்யத்திற்கு ரூ.25 ஆயிரம் என ரூ.1.75 கோடியில் வழங்கப்படும்.
நீலகிரி மாவட்டம் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல் வட்டாரத்தில் உள்ள குழந்தைகள் மய்யங்களில் முன்பருவக் கல்வி பயிலும் 9,088 குழந்தை களுக்கு ஸ்வெட்டர், தொப்பி, காலுறை வழங்குவதோடு 608 மய்யங்களுக்கு தரைவிரிப் பான்கள் ரூ.80 லட்சம் செலவில் வழங்கப்படும்.
குழந்தைகள் மய்யங்களில் சமையலுக்கு தேவைப்படும் மளிகை பொருட்கள் மற்றும் எரிவாயு உருளைகள் அரசு மற்று கூட்டுறவு அமைப்புகள் மூலம் கொள்முதல் செய்யப் பட்டு அனைத்து குழந்தைகள் மய்யங்க ளுக்கும் நேரடி யாக விநியோகம் செய்யப்படும்.
முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்த நாளன்று சத்துணவு திட் டத்தில் பயனடைந்து வரும் குழந் தைகளுக்கு இனிப்பு பொங்கல் வழங்கப்படும்.
பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகள் குறித்த தரவுகளை சேமிக்கும் இணைய தளம் நிறுவுதல், நிகழ்நேர கைப் பேசி செயலி மூலம் ஆய்வு மற்றும் கண்காணிப்பு ரூ.1 கோடியில் மேற்கொள்ளப்படும்.
குழந்தை பராமரிப்பு நிறுவ னங்கள், மகளிர் காப்பகங்களில் உள்ள குழந்தைகள் மற்றும் பெண் களுக்கு நிபுணர்கள், சேவை வழங் குநர்கள் வாயிலாக மனரீதியில் மாற்றங்கள் ஏற்படுத்துவதற்கு உரிய பயிற்சிகள் தேவையின் அடிப்படையில் ரூ.1 கோடி செலவி னத்தில் வழங்கப்படும்.
பாலியல் குற்றங்கள் அல்லாத பிற துன்புறுத்தல்கள் மற்றும் சுரண்டலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இழப்பீடு வழங்கு வதற்கு ரூ.50 லட்சம் நிதித் தொகுப்பு உருவாக்கப்படும்.
சமூக பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்படும் 34 அரசு குழந்தை கள் இல்லங்களிலும் திறன் பலகை கள் (ஸ்மார்ட் போர்ட்) ரூ.55 லட்சம் செலவினத்தில் வழங்கப் படும்.
திருச்சிராப்பள்ளி, கோயம் புத்தூர் மற்றும் சென்னையில் குழந்தைகளுக்கான போதை தடுப்பு மய்யங்கள் ரூ.1.14 கோடி செலவினத்தில் அமைக்கப்படும்.
தூத்துக்குடி மாவட்டம் தட்டப்பாறை அரசு குழந்தைகள் இல்லம், சென்னை மாவட்டம், இராயபுரம் சிறுவருக்கான அரசு குழந்தைகள் இல்லம் ஆகியவற்றில் தலா ரூ.7 கோடி செலவில் புதிய கட்டடங்கள் கட்டப்படும்.
சென்னை, சிறுமியருக்கான அரசினர் குழந்தைகள் இல்லம், திருநெல்வேலி, சென்னை மற்றும் மதுரை அரசினர் கூர்நோக்கு இல்லங்களில் பணியாளர் குடியிருப்பு ரூ.10 கோடி செலவினத்தில் கட்டப்படும்.