இன்றைய ‘தினமலரில்’ (19.4.2023) பக்கம் 8 இல் ஒரு கடிதம்.
அழுவதா? சிரிப்பதா? கலைஞர்மீது காழ்ப்பு என்றால், அம்மணமாகக் கூட ஓடுவார்கள் போலிருக்கே!
‘‘கருணாநிதியின் ஆட்சியில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வகுப் பினருக்கு ஒட்டுமொத்தமாக 37 சதவிகித இட ஒதுக்கீடு மட்டுமே அமலில் இருந்தது” என்று கிறுக்கியுள்ளது பூணூல் மலர்.
கலைஞர் ஆட்சிக்கு வந்த காலம்வரை பிற் படுத்தப்பட்டவர்களுக்கு 25 சதவிகிதமும், தாழ்த்தப் பட்டவர்களுக்கு 16 சதவிகிதமுமாக, மொத்தம் 41 சதவிகிதமாக இருந்து வந்தது. முத்தமிழ் அறிஞர் கலைஞர் முதலமைச்சரான நிலையில், பிற்படுத்தப் பட்டோருக்கு 31 சதவிகிதமும், தாழ்த்தப்பட்டோருக்கு 18 சதவிகிதமுமாக 49 சதவிகிதமாக உயர்ந்தது.
பார்ப்பன ‘தினமலரின்’ திருகுதாளத்தைத் தெரிந்துகொள்வீர்!