மூத்த கல்வியாளர் ச.சீ.ராஜகோபாலன் மறைவுக்குத் தமிழர் தலைவர் இரங்கல்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

மூத்த கல்வியாளர் ச.சீ.ராஜகோபாலன் மறைவுக்குத் தமிழர் தலைவர்  இரங்கல்

மூத்த கல்வியாளர் ச.சீ.ராஜகோபாலன் அவர்கள் வயதுமூப்பு, உடல்நலக் குறைவின் காரணமாகத் தனது 95-ஆம் வயதில் நேற்றிரவு (03.02.2026) காலமானார் என்ற செய்தியறிந்து வருந்துகிறோம். ஆசிரியராகப் பணியைத் தொடங்கி, மாணவர்களின் கல்வி உரிமைக்காகக் குரல் கொடுத்தவர். சமச்சீர் கல்விக் குழுவில் இடம்பெற்று அதைச் சாத்தியப்படுத்தியவர்களுள் ஒருவர். நீட், தேசியக் கல்விக் கொள்கை போன்றவற்றை எதிர்த்தவர்.

அவரது மறைவு கல்வி உரிமைப் போராட்டத்திற்கு ஓர் இழப்பே ஆகும்.

அவரது மறைவால் துயருறும் தோழர்கள், குடும்பத்தினர், உறவினர்கள் அனைவருக்கும் நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அவரது உடல் இன்று காலையே போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்குக் கொடையாக வழங்கப்பட்டிருக்கிறது. மறைந்தும் மாணவர்களின் கல்விக்குப் பயன்படுகிறார் என்பது அவரது வாழ்வுக்குப் பாராட்டத்தக்க பொருத்தமான நிறைவல்ல… நீட்சியாகும்.

(கி.வீரமணி) 

தலைவர்,

திராவிடர் கழகம்

 

சென்னை

04.02.2026

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *