03.02.2026 அன்று பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு நாள். அதை நினைவு கூறும் வகையில் மானமிகு ஆசிரியர் கி வீரமணி அவர்கள் அரசியலும் பகுத்தறிவும் – அதுவே திமுக என்ற தலைப்பில் அண்ணா அவர்கள் கூறிய சில கருத்துக்களை பார்க்கலாம்.
பாராளுமன்றத் தேர்தலில் விழுப்புரத்தில் உதயசூரியன் சின்னத்திலும், சிதம்பரத்தில் பானை சின்னத்திலும் வி.சி.க. கட்சி நின்று வெற்றி பெற்றது.
தோழர் திருமாவின் வெற்றி ஜாதி மத அரசியலை கடுமையாக கடந்து பெற்ற வெற்றி மிகப்பெரியது. அப்போது சிலர் விசிக சரியாக கூட்டணிக்கு ஒத்துழைக்கவில்லையாமே என்று பேசியதை கேட்க நேர்ந்தது.
அரசியலில் கூட்டணி கட்சிகளின் வெற்றி மிக முக்கியமானது. அது பண வெற்றி அல்ல. தமிழ்நாட்டில் நீட் தேர்வு எதிர்ப்பு என்பது எல்லோருக்கும் ஒத்த கருத்து உள்ள விஷயம். ஆனால் கேரளாவில் நீட் விஷயம் அப்படிப்பட்டதல்ல.
ஆர்எஸ்எஸ் இந்து விரோதத்தை அவ்வப்போது கிளம்பி விடுகிறது. நாம் சில நேரங்களில் கிருஷ்ணரையும் ராமரையும் பற்றி பேசுகிறோம். கிருஷ்ண ஜெயந்திக்கும் தீபாவளிக்கும் வாழ்த்து சொல்வதில்லை என்று பேசுபவர்கள் அண்ணாவின் ஆரிய மாயை படிக்க வேண்டும்.
நாம் இன விரோத சக்திகளுக்கு நம்பிக்கைகளுக்கு வாழ்த்து சொல்வதில்லை. நாட்டில் ஜாதியை காப்பாற்றுகிற மதம், கடவுள், சாஸ்திரம், சம்பிரதாயம், சட்டம், ஒழிய வேண்டும்.
அதனால் ஜாதி கொடுமை தீண்டாமை பெண் அடிமை அழிய வேண்டும். திமுக பகுத்தறிவு கொண்ட கட்சி. திமுக மற்ற கட்சிகளைப் போல் அல்லாமல் பகுத்தறிவு பிரச்சாரத்தை அடிப்படையாக கொண்ட கட்சி பேரறிஞர் அண்ணா கூறியதை மேற்கோள்காட்டி விரிவாக பேசியது Periyar Vision OTT இல் வெளிவந்து,ள்ளது. காணுங்கள் சிந்தியுங்கள்…
– எம்.தேவசிகாமணி,
கொளத்தூர் சென்னை

Periyar Vision OTT-இல் காணொலிகளைப் பார்த்து விமர்சனம் எழுதி [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். உங்கள் விமர்சனங்கள் ‘விடுதலை’ நாளிதழிலும், Periyar Vision OTT-இன் சமூக வலைதளப் பக்கங்களிலும் வெளியிடப்படும்.
சமூகநீதிக்கான உலகின் முதல் OTT எனும் பெருமைக்குரிய ‘Periyar Vision OTT’-இல் சந்தா செலுத்தி பகுத்தறிவுச் சிந்தனையூட்டும் அனைத்துக் காணொலிகளையும் விளம்பரமின்றிப் பார்த்து மகிழுங்கள்!
உங்களுக்கான சிறப்புச் சலுகைகளை தெரிந்துகொள்ள periyarvision.com/subscription பக்கத்திற்குச் செல்லுங்கள்!
இணைப்பு : periyarvision.com
