பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு ஊர்வலம்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

வல்லம். பிப்.4- தேசிய சாலை பாதுகாப்பு மாதம் – 2026 விழாவையொட்டி தலைக்கவசம், மற்றும் இருக்கைப் பட்டை அணிவது குறித்து விழிப்புணர்வு பேரணியை  தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தொடங்கி வைத்தார். தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி தஞ்சை, கும்பகோணம், பட்டுக் கோட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் சார்பில் ‘சீட் பெல்ட்’ மற்றும் ‘தலைக்கவசம்’ அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் தஞ்சையில் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து தஞ்சை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஜெய்சங்கர் அனைவரையும் வரவேற்றார். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தொடங்கிய ஊர்வலத்தை மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம், கொடியசைத்து தொடங்கிவைத்து உரையாற்றினார்.

சாலைப் பாதுகாப்பு மாதவிழா ஜனவரி 21ஆம் தேதி தொடங்கி 31ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் ‘சீட் பெல்ட’ அணிவது ‘தலைக்கவசம்’ அணிவது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவர்கள் இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்களுடன் பங்கேற்றனர்.

இதில் தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம், மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், வருவாய் கோட்டாட்சியர் செல்வி நித்யா மற்றும் காவலர்கள், தஞ்சை, பட்டுக்கோட்டை, கும்பகோணம் வட்டாரப் போக்குவரத்துப் பணியாளர்கள் கலந்து கொண்டு ஒருங்கிணைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் பெரியார் மணியம்மை நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் (50) மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் பாக்கியராஜ் மற்றும் திட்ட அலுவலர் கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *