இந்திய அஞ்சல் துறையில் 28,740 காலிப்பணியிடங்கள் உள்ளன. 10ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள். தமிழ்நாட்டில் 2,009 இடங்கள் காலியாக உள்ளன. விண்ணப்பிக்கும் முறை மற்றும் முக்கிய தேதிகள் குறித்த முழு விவரங்கள்:
இந்திய அஞ்சல் துறையில் நாடு முழுவதும் உள்ள கிளைகளில் காலியாக உள்ள 28,740 ‘கிராமின் டாக் சேவக்’ (GDS) – கிராமப்புற பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் கிளை போஸ்ட் மாஸ்டர் (BPM) மற்றும் உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் (ABPM) ஆகிய பணியிடங்களும் அடங்கும்.
விண்ணப்பப் பதிவு தொடக்கம்: ஜனவரி 31, 2026
விண்ணப்பிக்க கடைசி நாள்: பிப்ரவரி 14, 2026
கட்டணம் செலுத்த கடைசி நேரம்: பிப்.16, 2026 (மாலை 5 மணி வரை)
திருத்தம் செய்யும் காலம்: பிப்ரவரி 18 மற்றும் 19, 2026
கல்வித்தகுதி மற்றும் வயது வரம்பு:
கல்வி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 18 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு முறை: எவ்விதத் தேர்வும் கிடையாது. 10-ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஊதிய விவரம்: உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் கிராமின் டாக் சேவக்: மாதம் ரூ.10,000 முதல் ரூ.24,470 வரை. கிராமின் டாக் சேவக்: மாதம் ரூ.12,000 முதல் ரூ.29,380 வரை.
முக்கிய மாநில வாரியான காலிப் பணியிடங்கள்:
மொத்தம் 28,740 இடங்களில் சில முக்கிய மாநிலங்களின் விவரம்: தமிழ்நாடு: 2,009, கேரளா: 1,691, ஆந்திரப் பிரதேசம்: 1,060, கருநாடகா: 1,023, உத்தரப் பிரதேசம்: 3,169, மகாராட்டிரா: 3,553, மேற்கு வங்காளம்: 2,982.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக மட்டுமே இணையத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தில் ஏதேனும் தவறுகள் இருந்தால், பிப்ரவரி 18-19 தேதிகளில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைச் செலுத்தி திருத்தம் செய்து கொள்ளலாம். தேர்வு செய்யப்பட்டவர்களின் முதல் பட்டியல் பிப்.28-ஆம் தேதி வெளியாகும். அதில் விண்ணப்பதாரரின் பதிவு எண், மதிப்பெண் சதவீதம் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் இடம் ஆகிய விவரங்கள் இடம் பெற்றிருக்கும்.
