உன்னாவ், ஏப்.19 சிறுமியின் தாயாரை சரமாரி யாக தாக்கிய கும்பல், அவர்களின் குடிசைக்கு தீ வைத்ததில் குடிசைக்குள் இருந்த சிறுமியின் 6 மாதக் குழந்தை மற்றும் 2 மாதமே ஆன சகோதரி இருவருக்கும் பலத்த தீக்காயம் ஏற்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் கடந்த ஆண்டு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 11 வயது சிறுமி, இருவரால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப் பட்டார். இதனால் சிறுமி கருவுற்றதில், அவ ருக்கு குழந்தை பிறந்து தற்போது 6 மாதங் களாகின்றன. இந்நிலையில் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டிருந்த இருவர் அண்மையில் பிணையில் வெளியே வந்துள்ளனர். அவர்கள் இருவரும் கடந்த 17 ஆம் தேதி மாலை, மேலும் 5 பேருடன் சிறுமியின் குடிசை வீட்டிற்குச் சென்று, தங்கள் மீதான வழக்கைத் திரும்பப் பெறுமாறு மிரட் டியுள்ளனர். ஆனால், சிறுமியின் குடும்பத்தார் வழக்கைத் திரும்பப்பெற மறுத்துவிட்டதாக தெரிகிறது.
இந்நிலையில் சிறுமியின் தாயாரை சர மாரியாக தாக்கிய கும்பல், அவர்களின் குடிசைக்குத் தீவைத்ததில், குடிசைக்குள் இருந்த சிறுமியின் 6 மாதக் குழந்தை மற்றும் 2 மாதமே ஆன சகோதரி இருவருக்கும் பலத்த தீக்காயம் ஏற்பட்டது.
பாதிக்கப்பட்ட சிறுமியின் மகனுக்கு 35% காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவருடைய சகோதரிக்கு 45% காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தலைமை மருத்துவக் கண்காணிப்பாளர் சுஷில் சிறீவஸ்தவா தெரிவித்தார். மேலும் அவர்கள் நிலைமை மோசமானதால் இரு குழந்தைகளையும் மேல்சிகிச்சைக்காக கான் பூர் மருத்துவமனைக்கு அனுப்பியிருப்ப தாகவும் தெரிவித்தார்.
2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 13 ஆம் தேதி சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகவும், இதனால் அந்தச் சிறுமிக்கு குழந்தை பிறந்ததாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர். மேலும் தனது மகளின் கைக்குழந்தையை அழிக்கவே அவர்கள் வீட்டிற்குத் தீவைத்ததாக சிறுமியின் தாயார் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.
குறிப்பு: உ.பி. என்பதற்குப் பதிலாக கா.பி. – அதாவது காட்டுமிராண்டிப் பிரதேசம் என்று பெயரிடலாமே!