தமிழ்நாட்டில், திருச்சியில் அமைந்துள்ள தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனத்தில் (ICAR NRCB) இளநிலை திட்ட உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 13.02.2026க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இளநிலை திட்ட உதவியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி: பி.எஸ்சி (Agriculture / Horticulture / Biotechnology / Life Sciences / Allied subjects) படித்திருக்க வேண்டும்.
ஊதியம்: ரூ.15,000
வயது தகுதி: 21 வயது முதல் 45 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். ஒன்றிய அரசு விதிகள் படி வரம்பில் குறிப்பிட்ட பிரிவினருக்கு தளர்வு உண்டு.
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://nrcb.org.in/nrcbadmin/webfs/vacancy/No_1_Recruitment_notice.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
மின்னஞ்சல் முகவரி: [email protected]
விண்ணப்பிக்க கடைசி தேதி: 13.02.2026
