டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* இந்தியாவுக்குள் 4 சீன டாங்கிகள் நுழைந்ததாக ராகுல் குற்றச்சாட்டு – மக்களவையில் கடும் அமளி: மேனாள் இராணுவத் தளபதியின் சுயசரிதையை சுட்டிக்காட்டி பேச்சு; இக்கட்டான தருணத்தில் ராணுவத்திற்கு வழிகாட்டாமல் ஓடி ஒளிந்தார் பிரதமர் மோடி: ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு
* தமிழ்நாடு அரசு அறிவித்த பல்கலைக்கழகங்களுக்கான துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான தேடுதல் குழுக்களுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி எதிர்ப்பு
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா, வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் (எஸ்அய்ஆர்) காரணமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் டில்லியில் தலைமைத் தேர்தல் ஆணையரை சந்தித்தார். பங்கா பவன் வளாகத்தில் டில்லி காவல்துறையுடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களை அச்சுறுத்துவதாக காவல்துறையை அவர் குற்றம் சாட்டினார்.
* ஜெனரல் நரவணேவின் வெளியிடப்படாத சுயசரிதை; ராகுல் காந்தி பேச்சால் மக்களவையில் அமளி. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, தான் பேச அனுமதிக்கப்படவில்லை என்று கூறினார். “மேனாள் இராணுவத் தளபதி என்ன சொன்னார், மோடி ஜி அவரிடம் என்ன சொன்னார், ராஜ்நாத் சிங் ஜி என்ன சொன்னார், அவர் என்ன உத்தரவு கொடுத்தார் என்பதை நான் நாடாளுமன்றத்தில் சொல்ல விரும்புகிறேன். அவர்கள் ஏன் இவ்வளவு பயப்படுகிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை,” என்றார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* வரவிருக்கும் 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஜாதி பட்டியல் தயாரிப்பு என்பது வெறும் சுய அறிவிப்பின் அடிப்படையில் இருக்கக் கூடாது என்று ஒரு மனுதாரர் எழுப்பிய வாதத்தை உச்சநீதிமன்றம் ‘பொருத்தமானது’ என்று கூறி, இந்தக் கவலையை அதிகாரிகள் கவனத்தில் கொள்ளுமாறு அறிவுறுத்தியது.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* தமிழ்நாட்டின் நலன்கள் புறக்கணிக்கப்பட்டன, ஒன்றிய அரசின் பட்ஜெட் ஒரு ஏமாற்றம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்.
தி டெலிகிராப்:
* உத்தரகாண்டில் காவிகளின் அட்டூழியம்: ’பாபா ஸ்கூல் டிரஸ்’ என பெயர் வைத்த முஸ்லிம் கடைக்காரர் மீது பஜ்ரங் தள் கும்பல் தாக்குதல்: பாதுகாப்புக்கு சென்ற உத்தரகாண்ட் உடற்பயிற்சி கூட இந்து உரிமையாளருக்கு அச்சுறுத்தல்.
– குடந்தை கருணா
