செங்கல்பட்டு மாவட்டக் கழக இளைஞரணியின் கலந்துரையாடல்: பிப். 21 இல் தஞ்சையில் நடைபெறும் மாநில மாநாட்டில் பெருந்திரளாகக் கலந்து கொள்ள முடிவு!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

மறைமலைநகர், பிப்.3 செங்கல்பட்டு மாவட்டக் கழக இளைஞரணியின் கலந்துரையாடல் கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் இளங்குயில் மழலையர் பள்ளியில் 1.02.2026 அன்று மாலை 5 மணி அளவில் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மு.அருண்குமார் தலைமையில், செங்கல்பட்டு மாவட்டக் கழகத் தலைவர் அ.செம்பியன் முன்னிலையில், பொதுக்குழு உறுப்பினர் அ.பா.கருணாகரன் வரவேற்பு உரையுடன் தொடங்கியது.

மாநில இளைஞரணி இணைச் செயலாளர் சோ. சுரேஷ் தமது நோக்க உரையில், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ள திராவிடர் கழக இளைஞரணி, திரா விட மாணவர் கழகம், திராவிடர் கழக மகளிரணி, திராவிட மகளிர் பாசறை மாநில மாநாட்டில் செங்கல்பட்டு மாவட்டக் கழகத்தின் சார்பில் பெருந்திரளாகத் தோழர்களை பங்கேற்கச் செய்ய வேண்டும் என்பதனை விளக்கிப் பேசினார்.

கலந்துகொண்டோர்

நிகழ்வில் செங்கல்பட்டு மாவட்டச் செயலாளர் ம.நரசிம்மன், பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் சே.சகாயராஜ், பகுத்தறி வாளர் கழக மாவட்ட துணைச் செயலாளர் மு.பிச்சைமுத்து, மறைமலைநகர் நகரச் செயலாளர் முடியரசன், மறைமலை நகர் நகர பகுத்தறிவாளர் கழக  அமைப்பாளர் வசந்தன், மு. அறிவு, அரும்பாக்கம் தாமோதரன், மறைமலைநகர் தோழர் ஏழுமலை உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டு தமது கருத்துகளை எடுத்துரைத்தனர்.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

பிப்ரவரி 21 ஆம் தேதி தஞ்சாவூரில் நடைபெறும் மாநில இளைஞரணி, மாணவர் கழகம் மற்றும் மகளிரணி, மகளிர் பாசறை மாநாட்டில் செங்கல்பட்டு மாவட்டம் சார்பில் தனி வாகனத்தில் பெருந்திரளான தோழர்கள் கலந்து கொள்ள முடிவெடுக்கப்பட்டது.

இம்மாநில மாநாட்டை விளக்கித் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்களை நடத்துவது என்று முடிவு முடிவெடுக்கப்பட்டது.

இம்மாநில மாநாட்டை விளக்கிச் சுவர் எழுத்து விளம்பரங்கள் செய்வது என முடிவெடுக்கப்பட்டது.

இளைஞரணியின் சார்பில் ‘உண்மை’ இதழுக்கான சந்தாவை சேகரித்து அளிப்பது என தீர்மா னிக்கப்பட்டது.

நிறைவாக செங்கல்பட்டு மாவட்ட இளைஞரணிச் செயலாளர் வினோத்குமார் நன்றி கூற, கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *