ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஹெலன் க்வின் (Helan Quinn). வயது: 74.
இந்தப் பிரபஞ்சத்தைக் கட்டமைக்கும் அடிப்படைத் துகள்களைப் பற்றி, பல்வேறு முக்கிய இயற்பியல் கோட்பாடுகளை நிறுவி உள்ளார். உலகின் முக்கிய ஆராய்ச்சிக் கல்வி நிலையங்களில், கல்வி கற்பித்து, பல ஆராய்ச்சியாளர்களை உருவாக்கி வருகிறார். அமெரிக்க மாகாணங்களில், அறிவியல் கல்வி எப்படி இருக்க வேண்டும் என்பதை வரையறுத்துக் கொடுத்து, மாற்றங்களை உருவாக்கி வருகிறார்.
தனது வாய்ப்புகள் பற்றி: ‘அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தபோது, எனக்கு, ஆராய்ச்சியைத் தேர்ந்தெடுப்பதா அல்லது பள்ளி ஆசிரியர் ஆகிவிடுவதா என்ற குழப்பம் இருந்தது.
எனது ஆலோசகர், ‘பொதுவாகப் பெண்கள் திருமணமாகி படிப்பைப் பாதியில் விட்டுச் சென்றுவிடுவதால், உயர்கல்வி நிலையங்கள் பெண்களைச் சேர்த்துக் கொள்ள தயங்குகின்றன. ஆனால், உன்னைப் பற்றி நாங்கள் கவலைப்படத் தேவையில்லை’ என்று குறிப்பிட்டார்.
நான் திருமணமே செய்துகொள்ள முடியாது என்கிறாரோ என்று வியந்தேன்”. இருந்தாலும், ஹெலன் தனக்குக் கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு, 1960களில் இருந்து தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு சாதித்து வருகிறார்.
