அண்ணாமலைப் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என். ரவியின் அத்துமீறல்!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சிதம்பரம், பிப்.3 அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் இரு முறை தேசிய கீதம், தமிழ் தாய் வாழ்த்தை தேசிய கீதத்திற்குப் பிறகு பாட வைத்த ஆளுநர் ஆர்.என். ரவிக்கு தமிழ் உணர்வாளர்கள் கண்டனத்தை பதிவு செய்து வருகிறார்கள்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 87-ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி கலந்து கொண்டு கலை, அறிவியல் மற்றும் மொழியியல், பொறியியல், கல்வி, இசை, வேளாண், மருத்துவம், கடல் வாழ் அறிவியல் உள்ளிட்ட 10 துறைகளைச் சார்ந்த 2014 மாணவ, மாணவிகளுக்கு நேரடியாக பட்டங்களையும் பதக்கங்களையும் வழங்கினார். அதேபோல் மறைமுகமாக 35,815 பேருக்கு என 36 ஆயிரத்து 829 பேருக்கு பட்டங்களையும் பதக்கங்களையும் வழங்கி வாழ்த்துகளை கூறினார்.

இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழகத்தின் வரலாற்று துறை  ஆராய்ச்சி மாணவர் புஷ்பராஜ்  பட்டங்களை வாங்கும் போது தமிழ்நாடு  முதலமைச்சரின் படத்தை பட்டத்தின் மீது வைத்து ஆளுநர் கையால் வாங்கினார். இது குறித்து அவர் கூறுகையில், ‘நிகழ்ச்சியின் முடிவில் தேசிய கீதம் பாட வேண்டும். ஆனால் முதலிலும் முடிவிலும் 2 முறை தேசிய கீதம் பாடி விட்டு பின்னர் தமிழ் வாழ்த்தை பாடுவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார். தமிழ் வளர்த்த பல்கலைக்கழகத்தில் தமிழனின் கலாச்சாரங்களை ஆளுநர் மாற்றி உள்ளார். தமிழ்நாட்டில் துணைவேந்தராக தமிழ்நாடு முதலமைச்சரை நியமிக்க வேண்டும் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அந்த தீர்மானத்தை ஆளுநர் புறக்கணித்து விட்டார். தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ள பல்வேறு திட்டங்களால் நான் பணம் உதவி பெற்று கல்வி பயின்று உள்ளேன். ஆகையால் நான் அவரிடம் பட்டம் வாங்கும் போது தமிழ்நாடு முதலமைச்சர் படத்தை பட்டத்தின் மீது வைத்துக் கொண்டு கையால் பட்டம் வாங்கியதாக நினைத்துக் கொண்டேன்’ என்றார். இதனால் பட்டமளிப்பு விழாவில் பரபரப்பு ஏற்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *