பயன்பாட்டாளரால் உருவாக்கி பயன்படுத் தப்பட இயன்ற சோதனை செய்யப்படாத செய்திகளை அனுமதிக்கும் இன்டர்நெட் உலகம் தோற்றம் பெற்ற பிறகு தோற்றம் பெற்ற ஊடகத்துடன் தவறான செய்தி விரும்பத்தகாத வடிவத்தை எடுக்கும் பிரச்சினையும் தோன்றிவிட்டது. ‘தவறான செய்திகள்’ மற்றும் பெரும்பாலான முற்றிலும் தவறான ‘போலியான செய்திகள்’ என்று அழைக்கப்படுவதைத் தடுப்பது தவறாமல் கட்டாயமாக விரைந்து மேற் கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை ஆகும். ஆனால், இதில் ஒன்றிய அரசோ அதன் பிரிவு களோ கட்டுப்பாட்டு அமைப்பாக இருக்க முடியுமா என்ற கேள்வியை அது எழுப்புகிறது. Information Technology (Intermediary Guidelines and Digital Media Ethics Code) Amendment Rules 2033 திருத்த சட்டத்தில், அரசுடன் தொடர்புடைய ஆன்லைன் செய்திகள் போலியானவை என்றோ, தவறானவை என்றோ, தவறாக வழிநடத்திச் செல்பவையா என்று கண்டுபிடிப்பதற்கான, உண்மையை சோதனை செய்வதற்கான அமைப்புகளின் பட்டியலில் ஒன்றிய அரசையும் இது இடம் பெறச் செய்துள்ளது. இந்த அமைப்பினால் அடையாளம் காணப்படும் செய்திகளுக்கு எதிராக சமூக ஊடக நிறுவனங்கள் அல்லது இன்டர்நெட் வசதி அளிக்கும் நிறுவ னங்கள் மீது நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் அல்லது தகவல் தொழில் நுட்ப சட்டத் தின் 79 ஆவது பிரிவில் அளிக்கப்பட்டுள்ள Safe Horbour என்ற பாதுகாப்பை இழக்கத் தயாராக இருக்க வேண்டும். மூன்றாவது நபர்கள் தங்களது கணினி தளங்களில் வெளியிடும் செய்திகளுக்கான அபராதம் செலுத்துவதில் இருந்து தவிர்ப்பு பெறுவதற்கு இடைநிலை ஒளி பரப்பாளர்களை அது அனுமதிக்கிறது. இது ஏற்றுக் கொள்ள முடியாததும், பிரச்சினைகள் மிகுந் தவையும் ஆகும். மேலும், செய்திகளை நீக்கும் ஆணைகள் அளிப்பதற்கான நடைமுறையை 2000 ஆண்டு தகவல் தொழில் நுட்ப சட்ட 69 ஆவது பிரிவு தெளிவாகத் தெரிவிக்காமல் ஏமாற்றம் அளிப்பதாக இருந்துள்ளது என்பதுடன் அறிவிக்கப்பட்ட இத்திருத்தங்களை மீறி செயல் பட இயன்றதாகவும் அது உள்ளது. செய்திகளை இருட்டடிப்பு செய்வதற்கான தெளிவான வழி காட்டுதல்களை வழங்கிய ஷ்ரேயா சிங்காலுக்கும் ஒன்றிய அரசுக்கும் இடையே 2015இல் நடை பெற்ற வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராகவும் அது உள்ளது.
மேல்முறையீடு செய்யவோ அல்லது நீதித் துறை கவனிக்கத் தவறியதற்கான சலுகையைப் பெறவோ உரிமை இல்லாத போது, எந்த ஒரு செய்தியையும் போலியானது என்றோ, தவறானது என்றோ முடிவு கட்டும் நீதிபதியின் இடத்தில் அரசு உட்காரமுடியாது. ஊடக அமைப்புகள் கேள்வி கேட்பதையோ அல்லது பரிசீலனை செய்வதையோ தடுப்பதற்கு அந்த அதிகாரம் அரசால் தவறாகப் பயன்படுத்தப்படலாம் என் பதே அதன் காரணம். சமூக ஊடக மேடைகளில் நுணுக்கமாக கருத்து தெரிவிக்கப்படுவதைப் பற்றியோ அல்லது விமர்சிப்பதைப் பற்றியோ அரசு அளிக்கும் தாக்கீது நடைமுறைகளை எடுத்துக் கொள்ளுங்கள். பெரும்பாலான ஊட கங்கள் அந்த தாக்கீதுகளுக்கு அடி பணியத்தான் வேண்டியுள்ளது. டிவிட்டர் போன்ற ஒரு சில நிறுவனங்களால் மட்டுமே அவற்றை எதிர்த்து நீதிமன்றங்களுக்கு செல்ல முடிகிறது. அரசின் ஓர் அமைப்பினால், அந்த மேடையில் இடம் பெற்ற செய்தி தவறானவை அல்லது போலியானவை என்று அறிவிக்கப்பட்டுவிடுவதன் மூலம் ஒரு மேடையின் எதிர்ப்பு ஆற்றல் நீக்கப்படும் என்று அச்சுறுத்தப்படுவதில் இருந்து, ஆன்லைன் மேடைகளில் பேச்சு மற்றும் கருத்து வெளிப்பாடு சுதந்திரத்தின் மீது அரசு ஒரு பேரதிர்ச்சியை ஏற்படுத்தி விடுகிறது என்பது தெளிவாகவே தெரிவதாக இருக்கிறது.
அரசு நிர்வாகம் உள்ளிட்ட அமைப்புகளை தங்களின் குதிகால்களில் நிற்கச் செய்வதற்காக அதிகாரத்துடன் உண்மை பேசுவது என்ற ஆற்றல் (Speak Truth to Power) சமரசம் செய்து கொள்ள முடியாதது என்பதுடன், ஒரு ஜனநாயக நாட்டில் பத்திரிகைத் துறையின் முக்கியமான வேலையுமே அதுதான். இந்தியாவில், பத்திரிகை சுதந்தரம் அரசமைப்பு சட்டத்தின் 19 ஆவது பிரிவில் அளிக்கப்பட்டுள்ளது. ஊடக உரிமைகள் மற்றும் மக்களின் பேச்சு சுதந்திரம் ஆகியவை இந்தப் பிரிவினால் அளிக்கப்பட்டுள்ளன. அதனால், அரசு மற்றும் ஊடகங் களுக்கான உறவு முறையில் ஊடகங்களுக்கு போதுமான சுதந்திரம் அளிக்கப்பட்டு, ஒரு கைக் கெட்டும் தூரத்தில்தான் வைத்துக் கொள்ளப்பட வேண்டும் என்று கூறப்படுவதில் நியாயம் இருக்கிறது.
எந்த ஒரு செய்தியையும் தவறானது அல்லது போலியானது என்பதை முடிவு செய்யும் நீதி பதியாக அரசு இருப்பதும், அந்த செய்திகளை வெளியிட்டதற்காக ஊடகங்கள்மீது நடவ டிக்கை எடுப்பதற்கு அரசுக்கு அதிகாரம் அளிக் கப்பட்டிருப்பதும், கடுமையான, கொடுமையான பத்திரிக்கைத் தணிக்கையே ஆகும்.
நன்றி: ‘தி இந்து’ தலையங்கம் 10-04-2023
தமிழில்: த.க.பாலகிருட்டிணன்