17.4.2023 அன்று சென்னைப் பல்கலைக்கழகத்தில் எழுத்தாளர் பொன்னீலன் எழுதிய ‘கரிசல்’ நாவலின் ஆங்கில மொழியாக்க நூல் வெளியீடு நடைபெற்றது. நூலினை தென்சென்னை மக்களவைத் தொகுதி உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் வெளியிட, முதல் பிரதியை தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் ம.இராசேந்திரன் பெற்றுக் கொண்டார். உடன்: நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பக மேலாளர் இரத்தின சபாபதி, சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலத் துறைத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில துணைச் செயலாளர் சி.மகேந்திரன், காவல்துறை மேனாள் தலைமை இயக்குநர் திலகவதி, நாவலை மொழிபெயர்த்த பொன்னீலனின் பெயர்த்தி ஜெ.பிரியதர்ஷினி.