மறைவு

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

மறைவு

திருவாரூர் மாவட்டம், குடவாசல் ஒன்றியம் மஞ்சக்குடி ராஜேந்திரன் தலைமை ஆசிரியர் (ஓய்வு) அவர்களது இளைய சகோதரரும், ‘விடுதலை’ அலுவலக  மேனாள் பணித் தோழருமான ரவிச்சந்திரன் (வயது 56) உடல்நலக்குறைவால் மதுரையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (1.2.2026) மாலை  மறைவுற்றார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவரது இறுதி நிகழ்வு இன்று (02.02.2026) மஞ்சக்குடி அவர்களது இல்லத்தில் நடைபெற்றது. திருவாரூர் மாவட்ட கழகத் தலைவர் எஸ்.எஸ்.எம்.அருண்காந்தி தலைமையில் கழகத் தோழர்கள் கலந்து கொண்டு இறுதி மரியாதை செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தனர்.

– – – – –

உடற்கொடை

கீழப்பாவூர் தந்தை பெரியார் குருதி, விழி, மற்றும் உடற்கொடை கழக நிறுவனர் அய். இராமச்சந்திரன் அவர்களின் தந்தை .ஆ.அய்யங்கண்ணு இன்று (2.2.2026) காலை 6 மணியளவில் மறைவுற்றார். அவர்களது இரு விழிகளும் திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு கொடையாக வழங்கப்பட்டன. கழகத் தோழர்கள் திரண்டு வந்து இறுதி மரியாதை செலுத்தினர். 3.2.2026 அன்று காலை 9 மணி அளவில் கீழப்பாவூரில் உள்ள அவரது இல்லத்திலிருந்து இறுதி ஊர்வலமாக புறப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவரது உடல் கொடையாக வழங்கப்படும்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *