திருமானூர் வருகை தந்த தமிழர் தலைவரை கழக பொறுப்பாளர்கள், பல்வேறு கட்சியினர், வியாபாரிகள் பயனாடை அணிவித்து வரவேற்றனர்.

திருமழப்பாடி வருகை தந்த தமிழர் தலைவரை கழக பொறுப்பாளர்கள், வியாபாரிகள், ஆசிரியர்கள், தமிழ் ஆர்வலர்கள் பயனாடை அணிவித்து வரவேற்றனர்.

திருமழப்பாடியில் தமிழர் தலைவர் முன்னிலையில் திருவள்ளுவர், அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.திருமழப்பாடியில் மறைந்த முனைவர் அ.ஆறுமுகனார் இல்லத்திற்கு சென்று அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார் தமிழர் தலைவர்.

அரியலூர் வருகை தந்த தமிழர் தலைவருக்கு மாவட்ட கழகத் தலைவர் விடுதலை நீலமேகம், மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன், சிந்தனைச் செல்வன், தங்க.சிவமூர்த்தி, வாலாசா வல்லவன் மற்றும் தோழர்கள் பயனாடை அணிவித்து வரவேற்றனர்.

மண்ணச்சநல்லூர் வருகை தந்த தமிழர் தலைவருக்கு லால்குடி வால்டேர், குழந்தை தெரசா, வி.அன்புராசா மற்றும் தோழர்கள் பயனாடை அணிவித்து இயக்க நன்கொடையினை வழங்கினர்.
