திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் அடிகள் நினைவு நாள் – 2.2.1942

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

அறிவாசான் தந்தை பெரியார் அவர்கள் ‘குடிஅரசு’ இதழினை 2.5.1925 அன்று முதல் தொடங்கி நடத்தினார்.

குடிஅரசின் இணை ஆசிரியராக கடவுள் நம்பிக்கையாளரும், காங்கிரசு வாதியுமான வழக்குரைஞர் திரு.வா.மு.தங்கபெருமாள் பிள்ளை அவர்களை இணை ஆசிரியராகக் கொண்டு தந்தை பெரியார் நடத்தினார்.

இக்குடிஅரசு செய்தித்தாள் அலுவலகத்தை திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் மடம் ஸ்ரீலஸ்ரீ சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாச்சாரிய சுவாமிகள் தொடங்கி வைத்து சொற்பொழிவாற்றினார். தனது உரையில், “பல பததிரிக்கையிலிருந்தும் இப்பத்திரிகை போன்ற கருத்தையுடைய பத்திரிகை வேறொன்றுமில்லை. அதனுடைய பெயரே அதற்குச் சான்றாகும்” என்று குறிப்பிட்டார்.

திருவையாற்றில் ‘வடமொழிக் கல்லூரி‘ என்று இயங்கி வந்ததை திருவையாறு அரசர் கல்லூரி என்று பெயர் மாற்றப்படவும், தமிழ் பாட மொழியாக கற்பிக்கப்படவும் செய்திட்ட பெருமைக்குரியவர் தான் திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள் என்பதும் மிகவும் குறிப்பிடத்தக்க வரலாற்று நிகழ்வாகும். வடமொழி செப்பேட்டில் வடமொழிக்கானதே இக்கல்லூரி என்று பார்ப்பனர்கள் கூறிவந்ததை அவருக்கு சமஸ்கிருதம் தெரிந்ததால் நிரூபித்து பார்ப்பனர்கள் சூழ்ச்சியை அம்பலப்படுத்திய அறிஞராவார்!

இப்பெரும் புகழுக்குரிய ஞானியாரடிகளின் நினைவு நாள் இன்று (2.2.1942).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *