இந்தோனேசியாவின் பப்புவா மாகாணத்தில் உள்ள அடர்ந்த காடுகளில் ‘கொரோவாய்’ அல்லது ‘கொலுஃபோ’ என்ற பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த 1970ஆம் ஆண்டு வரை தங்களைத் தவிர இந்த உலகில் வேறு மனிதர்களே இல்லை என்று நினைத்து வாழ்ந்து வந்தனர்.
இவர்கள் தரையில் வீடு கட்டுவதில்லை. மாறாக, சுமார் 10 முதல் 50 மீட்டர் உயரமுள்ள மிகப்பெரிய மரங்களின் உச்சியில் வீடுகளைக் கட்டி வாழ்கிறார்கள்.
காட்டு விலங்குகளிடம் இருந்தும், மற்ற பழங்குடியினரின் தாக்குதலில் இருந்தும் தங்களைக் காத்துக் கொள்ளவே இவர்கள் இவ்வளவு உயரத்தில் வசிக்கிறார்கள்.
காடுகளில் வேட்டையாடுவது, மீன் பிடிப்பது மற்றும் காட்டில் கிடைக்கும் பழங்களை உண்பது இவர்களது அன்றாட வாழ்க்கை. சுமார் 4,000 பேர் மட்டுமே கொண்ட இந்தச் சிறிய சமூகம், 55,000 ஆண்டுகளுக்கும் மேலாகத் தனித்தே வாழ்ந்து வந்துள்ளது.
1970-களில் சில ஆராய்ச்சியாளர்கள் இவர்களைச் சந்தித்த பிறகே இவர்களது இருப்பு உலகிற்குத் தெரியவந்தது. இவர்களிடம் மின்சாரம், சாலை வசதி என எதுவுமே கிடையாது. இன்றும் இவர்கள் தங்களது முன்னோர்களின் கலாச்சாரத்தையும் மொழியையும் அப்படியே பின்பற்றி வருகின்றனர்.
