சென்னை, பிப். 1– இந்தியாவிலேயே மருத் துவச் சிகிச்சைக்குச் சிறந்த மாநிலமாகத் தமிழ்நாடு உருவெடுத்துள்ளதைச் சுட்டிக்காட்டும் வகையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் முக்கியத் தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
அவர் தெரிவித்த செய் திகளின் சிறப்பம்சங்கள் பின்வருமாறு:
படை திரளும் வெளி நாட்டுப் பயணிகள்
வெளி நாடுகளில் இருந்து உயர்தர சிகிச்சை பெறுவதற்காக ஆண்டுதோறும் சுமார் 15 லட்சம் பேர் தமிழ் நாட்டிற்கு வருகை தருகின்றனர்.
இந்தியாவின் முதன்மை மாநிலம்
மருத்துவச் சிகிச்சைக் காக இந்தியா வரும் மொத்த வெளிநாட்டுப் பயணிகளில், 25 சதவீதம் பேர் தமிழ் நாட்டை மட்டுமே தேர்ந் தெடுக்கின்றனர். இது மாநிலத்தின் மருத்துவக் கட்டமைப்பின் மீதான நம்பிக்கையைக் காட்டு கிறது.
அய்.நா. சபையின் உயரிய அங்கீகாரம்:
மருத்துவ பயனாளர் களுக்குச் சிறந்த மற்றும் உயர்தர சிகிச்சை அளிப்பதில் முன்னுதார ணமாகத் திகழும் தமிழ் நாட்டிற்கு, அய்க்கிய நாடுகள் சபை (UN) விருது வழங்கி கௌரவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வெளிநாட்டு பயனாளர்கள் வருகை – 15,00,000 இந்தியாவின் மொத்த மருத்துவ வருகையில் 25 சதவீத பங்கு “இந்தியாவின் மருத்துவச் சுற்றுலா மய்யமாகத் தமிழ்நாடு மாறியுள்ளதோடு, உலகத்தரம் வாய்ந்த சிகிச்சைகளை மலிவான விலையில் வழங்குவதே இந்த ஈர்ப்பிற்குக் காரணம்.”
இந்தச் சாதனையானது தமிழ்நாடு அரசின் மருத்துவக் கொள்கை களுக்கும், இங்குள்ள மருத்துவர்களின் அர்ப் பணிப்பிற்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகக் கருதப்படுகிறது.
