கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள்

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

1.2.2026
டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* தி.மு.க. சாதனைகள், ஒன்றிய அரசின் வஞ்சகத்தை எடுத்துச் சொல்லும் ‘தமிழ்நாடு தலைகுனியாது’ பரப்புரை இன்று தொடக்கம்.

* திமுக அளித்த வாக்குறுதிகள் பெரிதும் நிறைவேற்றப்பட்டுள்ளன; மக்கள் எங்களுக்கு மீண்டும் வாக்களித்து வெற்றியை தருவார்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* தேசியவாத காங்கிரசின் இரண்டு பிரிவுகளும் பிப்ரவரி 12இல் இணையும், சரத் பவார் கருத்து.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின் போது பின்பற்றப்படும் வழிமுறை குறித்து, முதலமைச்சர் மம்தா தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு மீண்டும் கடிதம். இந்த செயல்முறையை சீர்குலைக்கும் உள்நோக்கத்துடன், பார்வையாளர்களும், நுண்பார்வையாளர்களும் தரவுகளைத் திரித்துக் கூறுவதாக குற்றச்சாட்டு.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* திருப்பதி லட்டில் நெய் கலப்பட வழக்கு: திருப்பதி லட்டு நெய் கலப்பட வழக்கில் தொடர்புடைய பல குற்றவாளிகள் மற்றும் அரசு அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளை எடுக்குமாறு கோரி, உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப் பட்ட சிபிஅய் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்அய்டி) ஆந்திரப் பிரதேச அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தி இந்து:

* எப்ஸ்டீன் ஆவணங்களில்.. பிரதமர் மோடியின் பெயர்! இந்தியப் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபரின் நலனுக்காக 2017ஆம் ஆண்டின் இஸ்ரேல் பயணத்தில் ஆலோசனை பெற்று செயல்பட்டார்,” என்று திரு. மோடியின் இஸ்ரேல் பயணம் முடிவடைந்த நாளில் அனுப்பப்பட்ட மின்னஞ்சலில் எப்ஸ்டைன் கூறியிருந்தார். எதையும் நம்பாதீங்க..” ஒன்றிய அரசு விளக்கம்

* யுஜிசி சமத்துவ விதிகள் மீதான தடைக்கு எதிராக பேராசிரியர்கள், மாணவர்கள், இடதுசாரி ஆதரவு பெற்ற அகில இந்திய மாணவர் சங்கம் டில்லி ஜந்தர் மந்தரில் போராட்டம். போராட்டத்தில் ஈடுபட்ட பேராசிரியர்களும், மாணவர்களும், கல்லூரி வளாகங்களில் நடக்கும் ஜாதிப் பாகுபாடு சம்பவங்களைச் சுட்டிக்காட்டி, அந்த விதிகளுக்கு ஆதரவளித்தனர்.

* பொருளாதாரம் அதல பாதாளத்தில் வீழ்ச்சி; ஒன்றிய பட்ஜெட் உண்மையான தீர்வுகளை வழங்குமா? காங்கிரஸ் தலைவர் கார்கே கேள்வி.

– குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *