இன்றைய குளிர்சாதனங்கள் சுற்றுச் சூழலுக்கு கேடு தரும் புளூரினாக்கம் செய்யப்பட்ட வாயுவை பயன்படுத்துகின்றன. அய்ரோப்பாவில் 2030க்கு மேல் அதற்கு தடை விதித்துள்ளனர். எனவே, ஜெர்மனியிலுள்ள ‘மேக்னோதெர்ம்’ மின் ஆராய்ச்சியாளர்கள், எந்த மாசுபாட்டையும் ஏற்படுத்தாத, காந்த ஆற்றலில் இயங்கும் குளிர்சாதனப் பெட்டிகளை உருவாக்கியுள்ளனர்.
சில பொருட்கள் காந்தப் புலத்திற்குள்ளாகும்போது சூடாகின்றன. இதை காந்த வெப்ப விளைவு என்பர். இதை பயன்படுத்தி, தகடை சூடாக்கவும், குளிர் விக்கவும் செய்யும் தொழில்நுட்பத்தை மேக்னோதெர்மின் விஞ்ஞானிகள் உரு வாக்கியுள்ளனர். அதுமட்டுமல்ல, ‘போலா ரிஸ்’ என்ற பெயரில் குளிர்சாதனப் பெட்டியையும் வர்த்தகம் செய்ய துவங்கி யுள்ளது மேக்னோதெர்ம். இதனுள் 150 பாட்டில் பானங்களை வைத்து, 5 டிகிரி செல்ஷியஸ் குளிர்ச்சியில் வைக்கலாம்.
காந்தத்தில் இயங்கும் இதற்கு, குறை வான மின்சாரமே தேவை என்பதோடு, துளியும் சத்தம் எழுப்பாத ‘ரெப்ரிஜிரேட்டர்’ இது.