தூத்துக்குடி, ஜன.31 திமுக- காங்கிரஸ் இடையேயான பேச்சுவார்த்தை “நல்லா போய்க் கொண்டிருக்கிறது” என திமுக துணைப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற குழு தலைவருமான கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
”கூட்டணி ஆட்சி” விவகாரத்தில் காங் கிரஸ் கோரிக்கையை திமுக நிராகரித்தது. இதனால் இரு கட்சிகளிடையேயான கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தேக்க நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் டில்லியில் சோனியா காந்தி இல்லத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை, கனிமொழி 28.1.2026 அன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு விவரங்களை விரிவாக நாம் பதிவு செய்திருந்தோம்.
இந்நிலையில் தூத்துக்குடியில் நேற்று (30.1.2026) செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த கனிமொழி, எம்.பி., ”திமுக- காங்கிரஸ் கூட்டணிப் பேச்சுவார்த்தை நன்றாகப் போய்க் கொண்டிருக்கிறது. இந்தப் பேச்சுவார்த்தைகள் முடிந்த உடன் தொகுதி பங்கீடு உள்ளிட்ட விவரங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார்” என்றார்.
