மோடி பீகாருக்கு சென்றால் தமிழர்கள் மோசம் என்பார் கு. செல்வப்பெருந்தகை சுளீர்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

திருவாரூர், ஜன.31 தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை திருவாரூரில் அளித்த பேட்டி: எடப்பாடி பழனிசாமி போல் கனிமொழி முகத்தை மூடிக்கொண்டு மாற்று காரில் சென்று ராகுல் காந்தியை சந்திக்கவில்லை. சிங்க பெண்ணாக நேரில் சென்று சந்தித்துள்ளார். ஒரு வாரத்தில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெறும். எங்களுக்கான தேவைகளை கேட்டு பெறுவோம். அதற்காக திமுகவுக்கு நெருக்கடி அளிக்க மாட்டோம்.

பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வந்தால் தமிழ் மொழி சிறந்த மொழி, தமிழர்கள் பாரம்பரியமானவர்கள் என்று பேசுவார்.

அதே நேரத்தில் பீகாருக்கு சென்றால் அங்கு தமிழர்கள் மோசமானவர்கள் என்று பேசுவார். அதிமுக, பாஜக கூட்டணி பொருந்தாத கூட்டணி. தமிழ்நாட்டில் பிரசாரத்துக்கு வந்த பிரதமர் மோடி ஒரு இடத்தில் கூட எடப்பாடி பழனிசாமி பெயரை குறிப்பிடவில்லை என்றார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *