ஜனவரி 31, 1938 அன்று வெளியான ‘குடிஅரசு’ இதழில், ‘மனித இனம் எதிர்காலத்தில் செயற்கை முறையில் குழந்தைகளை உருவாக்கும் தொழில்நுட்பத்தை எட்டும்’ என்பதை தந்தை பெரியார் பதிவு செய்தார். மேலை நாடுகளிலேயே இது குறித்த தெளிவான சித்தாந்தங்கள் உருவாகாத காலத்தில், ஒரு தமிழ்ச் சூழலில் நின்று கொண்டு தந்தை பெரியார் இக்கருத்தை முன்வைத்தது உலகத்தையே வியக்கச் செய்யுமொரு நிகழ்வாகும்.
மேடைதோறும் முழங்கிய அறிவியல்
இந்தக் கட்டுரையை வெளியிட்டதுடன் நின்று விடாமல், தான் கலந்துகொண்ட பொதுக்கூட்டங்கள் மற்றும் திருமண விழாக்களில் இக்கருத்தை மக்களி டையே விளக்கி வந்தார்.
அப்போது இருந்த மக்கள், “இயற்கைக்கு மாறாக இப்படி எல்லாம் நடக்குமா?” என்று சந்தேகித்தனர்.
அறிவியல் வளர்ச்சியின் மூலம் பெண் களைக் குழந்தைப் பெறும் இயந்திரமாக மட்டும் பார்க்காமல், அவர்களுக்கு மகப்பேறு வலியிலிருந்தும், சமூகக் கட்டுப் பாடுகளிலிருந்தும் விடுதலை கிடைக்கும் என்பதை அவர் உணர்த்த விரும்பினார்.
வரலாறாக மாறிய கணிப்பு
தந்தை பெரியார் தனது கணிப்பை வெளியிட்ட பல ஆண்டுகளுக்குப் பிறகுதான், அறிவியல் உலகம் இந்த மைல்கல்லை எட்டியது. உலகின் முதல் சோதனைக் குழாய் குழந்தையான லூயிஸ் பிரவுன் 1978-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் பிறந்தது.
“அறிவு என்பது வளரக்கூடியது; மாற்றத்திற்கு உட்பட்டது. எதையும் ஏன், எதற்கு என்று கேள்விகேட்டு ஆராய வேண்டும்.” – இதுவே தந்தை பெரியாரின் உறுதிப்பாடாகும்.
தந்தை பெரியார் அன்று விதைத்த அறிவியல் சிந்தனை, இன்று மருத்துவ உலகின் தவிர்க்க முடியாத அங்கமாக மாறியுள்ளது. அவரது தொலை நோக்குப் பார்வை அவரை ஒரு காலத்தையே கடந்த சிந்தனையாளராக இன்றும் அடையாளப்படுத்துகிறது.
சோதனைக் குழாய் குழந்தை பற்றி பெரியாரின் சிந்தனை கட்டுரை குடிஅரசு’ ஏட்டில் வெளிவந்த நாள் இன்று (31.1.2026)
