50 ஆண்டுகளுக்கு முன்…
அவசர நிலைப் பிரகடனக் காலத்தில் ஆசிரியர் கைது செய்யப்பட்ட நாள் இன்று (1976 ஜனவரி 31)
இந்தியாவில் அவசர நிலை எனப்படும் Maintanance of internal Security Act (Misa) 1975 ஆம் ஆண்டு ஜூன் 25 பிரகடனப்படுத்தப்பட்டது.
இச்சட்டத்தைக் கொண்டு பழி வாங்கும் உள்நோக்கத் துடன் எதிர் கட்சியினர் பலர் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். தமிழ்நாட்டில் அவசர நிலையை அமல்படுத்த மறுத்ததால், இதே நாளில் (ஜனவரி 31) தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது.
திண்டிவனம் பொதுக் கூட்டத்திற்கு அன்னை மணியம்மையார் அவர்களுடன் சென்று உரையாற்றி விட்டு, சென்னை பெரியார் திடலுக்குள் திரும்பி வந்த திராவிடர் கழகத்தின் அன்றைய பொதுச் செயலாளர் மானமிகு ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் அதே நாள் நள்ளிரவில் கைது செய்யப்பட்டார்.
எந்தக் காரணமும் கூறாமல் இக் கைது நடந்தது. கைது செய்த காவல்துறை அதிகாரி, ஆங்கிலத்தில் ஆசிரியரிடம் “Sir we have come for the unpleasant job” (அய்யா மகிழ்ச்சியற்ற பணியை செய்ய வந்துள்ளோம்!) என்று கூறி கைதுசெய்து அழைத்துச் சென்றனர். சரியாக 50 ஆண்டுகளுக்கு முன் நடந்த இந்தக் கைதின் காரணமாக ஏறத்தாழ ஓர் ஆண்டு காலம் சிறைக் கொடுமைகளை, தாக்குதல்களை அனுபவித்தார் ஆசிரியர். மேலும் தமிழ்நாடு முழுவதும் கழகத் தோழர்கள் பலர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
