சென்னை, ஜன.31 இந்தியாவில் யுபிஅய் (UPI) வழிப்பரிவர்த்தனைகள் வெகு வேகத்தில் வளர்ந்து வருகின்றன. கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் ரூ. 28 லட்சம் கோடியும், ஓராண்டில் சுமார் ரூ. 300 லட்சம் கோடியும் டிஜிட்டல் முறையில் பரிமாறப்பட்டுள்ளன. இருப்பினும், சாமானிய மக்களும், சிறு வியாபாரிகளும் இன்றும் அன்றாடத் தேவைகளுக்கு ரொக்கப் பணத்தையே பெரிதும் நம்பியுள்ளனர்.
தற்போது ஏடிஎம்களில் ரூ.500, ரூ.200 மற்றும் ரூ.100 தாள்கள் மட்டுமே கிடைப்பதால், சந்தைகளில் சில்லறைத் தட்டுப் பாடு நிலவுகிறது. குறிப்பாக, 500 ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து பொருட்கள் வாங்கும் நுகர் வோருக்கு, மீதிச் சில்லறை வழங்க முடியாமல் சிறு வியாபாரிகள் திணறி வருகின்றனர். 10, 20 மற்றும் 50 ரூபாய் நோட்டுகளின் புழக்கம் குறைவாக இருப்பதே இதற்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது.
குறைந்த மதிப்புள்ள நோட்டுகள்
இந்தச் சிக்கலைத் தீர்க்க ஒன்றிய அரசு தற்போது ‘ஹைப்ரிட் ஏடிஎம்’ (Hybrid ATM) எனும் புதிய திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது. இந்த ஏடிஎம்களின் சிறப்பம்சங்கள் பின்வருமாறு: இந்த ஏடிஎம்களில் ரூ. 10, 20 மற்றும் 50 ஆகிய குறைந்த மதிப் புள்ள கரன்சி நோட்டுகள் இருப்பு வைக்கப்படும்.
உங்களிடம் உள்ள ரூ. 500 அல்லது ரூ. 200 நோட்டுகளை இயந்திரத்தில் செலுத்தி, அதற்கு இணையான சில் லறை நோட்டுகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.
முக்கிய இடங்கள்: மக்கள் நட மாட்டம் அதிகம் உள்ள உள்ளூர் சந்தைகள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் மருத்துவமனை களில் இவை நிறுவப்பட உள்ளன.
தற்போது முதற்கட்டமாக மும்பையில் இந்தத் திட்டம் சோதனை முறையில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. அங்கு கிடைக்கும் வரவேற்பைத் தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள மற்ற நகரங்களுக்கும் இந்த ஹைப்ரிட் ஏடிஎம்கள் விரிவுபடுத்தப்பட உள்ளன. டிஜிட்டல் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் அதே வேளையில், சாதாரண மக்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் மத்திய அரசின் இந்த நடவடிக்கை ஒரு முக்கியச் சமநிலையாகப் பார்க்கப்படுகிறது.
