ஈரோடு,நவ.6 – நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே வெள்ளக் கல்காடு பகுதியை சேர்ந்த ஈஸ்வரன் மனைவி மஞ்சுளா (52). இவர் கோவிந் தம்பாளையம் அரசு தொடக்கப் பள் ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.
கடந்த 3ஆம் தேதி காலை மஞ்சுளா தனது மொபட்டில் வெள்ளக்கல்காட் டில் இருந்து கோவிந்தம்பாளையம் சென்றபோது, விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து மூளைச்சாவு அடைந்தார்.
இதையடுத்து அவரது உறுப்புகளை அரசு மருத்துவக்கல்லூரிக்கு கொடை யாக அளிப்பதாக குடும்பத்தினர் விருப்பம் தெரிவித்தனர்.
இதையடுத்து, மஞ்சுளாவின் இதயம், சிறுநீரகம், கண் மற்றும் தோல் உள்ளிட்ட உறுப்புகள் கொடையாகக் கொடுக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து நாமக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் மஞ்சுளாவின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது.