சென்னை, ஜன. 31- தமிழ்நாட்டில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள மருந்தாளுனர் பணியிடங்களில், தற்காலிக அடிப்படையில் மருத்துவம் சார்ந்த பணியாளர் களை (Paramedical Staff) நியமிக்க பொது சுகாதாரத் துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் சுமார் 1,200 மருந்தாளுனர் பணியிடங்கள் நீண்ட நாட் களாக நிரப்பப்படாமல் உள்ளன.
இதன் காரணமாக, மருத்துவ பயனாளிகளுக்கு மருந்து மற்றும் மாத்திரை களை வழங்கும் பணி களை செவிலியர்களே மேற்கொள்ள வேண்டிய சூழல் நிலவி வந்தது. இது பணிச்சுமையை அதிகரிப் பதாகப் புகார்கள் எழுந் தன.
முன்னதாக, இந்தப் பற் றாக்குறையைச் சமாளிக்க ஒரு மருந்தாளுனர் இரண்டு ஆரம்ப சுகாதார நிலையங்களைக் கவனித்துக்கொள்ள வேண்டும் என அரசு அறிவுறுத்தியிருந்தது. ஆனால், “ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் பணியாற்றுவது நடை முறைக்குச் சாத்தியமற்றது” என மருந்தாளுனர்கள் கடும் எதிர்ப்புத் தெரி வித்தனர்.
இதனைத் தொடர்ந்து, அந்த உத்தரவை ரத்து செய்யுமாறு அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. பொது சுகாதாரத் துறை இயக்குநர் சோமசுந்தரம் இதுகுறித்து அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிட்டு உள்ளதாவது:
ஒன்றுக்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலை யங்களில் மாற்றுப் பணியில் இருக்கும் மருந்தாளுனர்களை உடனடியாக விடுவித்து, அவர்களை மீண்டும் அசல் பணியிடங்களுக்கே அனுப்ப வேண்டும்.
மருந்தாளுனர் பணியிடம் காலியாக உள்ள நிலையங்களில், பொதுமக்களுக்கு தடையின்றி மருந்து வழங்க ஏதுவாக, தற்காலிக அடிப்படையில் மருத்துவம் சார்ந்த பணியாளர்களைப் பணியமர்த்திக் கொள்ள லாம்.
இந்த நடவடிக்கையின் மூலம் கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்து விநியோகம் தடையின்றி நடைபெறும் என எதிர் பார்க்கப்படுகிறது.
