ரேசன் கடைகளில் முறைகேடுகளை
தடுக்கும் விதமாகக் கண்காணிப்புக் குழு
தரமான பொருள்கள் மட்டுமே ரேசன் கடைகளில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுவதாக அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்துள்ளார். முறைகேடுகளை தடுக்கும் வகையில் ரேசன் கடைகளுக்கு பொருள்கள் அனுப்புவதை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு 21 லட்சம் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன என்றும், விரைவில் புதிய ரேசன் அட்டைகள் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
செவ்வாய்க் கிரகத்தில் தண்ணீரா?
நாசா புதுத் தகவல்
செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருந்திருக்கலாம் என நாசா புதிய தகவலை வெளியிட்டுள்ளது. பில்லியன் ஆண்டுகள் பழமையான பவளப்பாறை வடிவத்தில் உள்ள பாறை ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதன்மூலம் செவ்வாயில் ஒருகாலத்தில் தண்ணீர் மற்றும் கனிமங்கள் இருந்திருக்கலாம் எனவும், இந்த பாறை பூமியில் உள்ள பாறை போன்று இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
மகளிர் உரிமைத் தொகை
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிதாக விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்களுக்கு தமிழ்நாடு அரசு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கியுள்ளது. www.kumt.tn gov.in இணையதளம் மூலம் மேல்முறையீடு செய்யலாம் என அறிவித்திருந்தது. அவ்வாறு பதிவு செய்த மனுக்கள் மீதான பரிசீலனையை வருவாய் கோட்டாட்சியர்கள் தொடங்கியுள்ளனர். இதில், தகுதியான மகளிருக்கு ரூ.1,000 உரிமைத் தொகை வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும்.
