சென்னை, ஜன. 31- கவிஞர் ஈரோடு தமிழன்பன் நினைவேந்தல் நிகழ்ச்சியினைச் சென் னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்மொழித் துறை வரும் பிப்ரவரி 3ஆம் தேதி மெரினா வளாசப் பவளவிழாக் கலையரங்கில் காலை 10 மணிக்கு நடத்து கின்றது.
இந்த நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் கலந்துகொண்டு கவிஞர் ஈரோடு தமிழன்பனின் உருவப் படத்தினைத் திறந்துவைத்துச் சிறப்புரை ஆற்றவுள்ளார்கள்.
இந்நிகழ்ச்சியில் நீதியரசர் அரி. பரந்தாமன் அவர்களும், மூத்த பேராசிரியர் இராம. குருநாதன் அவர்களும், திராவிடர் கழகப் பிரச் சாரச் செயலாளர் வழக் கறிஞர் அ. அருள்மொழி அவர்களும் பங்கேற்று உரை நிகழ்த்துகின்றனர். மேலும் தி.வேணுகோபால் அவர்களும் கவிஞரின் மகன் மருத்துவர் பாப்லோ நெருடா அவர்களும் கலந்துகொண்டு உரை யாற்றுகின்றனர்.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில் கவிதை நினைவேந்தல் நடைபெறவுள்ளது. இதில் கவிஞர் தி. அமிர்தகணே சன், கவிஞர் கவிமுகில், கவிஞர் விழிகள் தி. நடராசன், கவிஞர் தமிழமுதன் ஆகியோர் பங் கேற்கின்றனர்.
நிகழ்ச்சிக்குச் சென் னைப் பல்கலைக்கழகத் தமிழ்மொழித் துறைத் தலைவர் பேராசிரியர் ய. மணிகண்டன் அவர்கள் தலைமை தாங்குகின்றார். வரவேற்புரையை முனை வர் வாணி அறிவாளன் அவர்களும் நன்றியுரையை முனைவர் வே. நிர்மலர் செல்வி அவர்களும் ஆற்ற வுள்ளனர்.
