அம்பத்தூர், ஜன. 31- அம்பத்தூர் நகரம் புதூரில் தனியாரிடமிருந்து அரசு மீட்டெடுத்த 3.12 ஏக்கர் நிலத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அமைக்க வேண்டுமென்பது திராவிடர் கழகத்தின் நீண்ட நாள் கோரிக்கையாகும்
29.1.2026 அன்று மாலை 04-00 மணிக்கு அம்பத்தூர் புதூர் பேருந்து நிலையம் அருகில் அம்பத்தூர் மக்கள் கூட்டமைப்பு சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் திராவிடர் கழகம், தமிழர் விடுதலைக் கழகம், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட். விடுதலைச் சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, எஸ்டி பிஅய். தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மே 17 இயக்கம், பொது நல அமைப்புக்களின் தோழர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் ஆவடி மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக ஆவடி மாவட்ட தலைவர் வெ.கார்வேந்தன், செயலாளர் க.இளவரசன்,திருமுல்லைவாயல் பகுதி கழக தலைவர் இரணியன், பட்டாபிராம் பகுதி கழக தலைவர் இரா.வேல்முருகன்,ஆவடி நகர கழக தலைவர் கோ.முருகன், செயலாளர் இ.தமிழ்மணி, துணைத்தலைவர் சி.வச்சிரவேல்,பெரியார் பெருந் தொண்டர் அம்பத்தூர் அ.வெ.நடராசன்,அம்பத்தூர் பகுதி கழக செயலாளர் அய்.சரவணன்,கண்ணன்,முத்துக்குமார்,துரைராவணன், சுந்தர்ராஜன்,மகளிர் அணி தோழர்கள் நதியா,எல்லம்மாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
