திருட்டுக்குத் துணைப் போகும் பக்தியும், மதமும்! சபரிமலையில் தங்கம் திருட்டு: திருடிய தங்கத்தை வீட்டில் வைத்துப் பூஜை செய்தால், செல்வம் பெருகும் என்பதால், திருடியதாக ஒப்புதல் வாக்குமூலம்!

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

திருவனந்தபுரம், ஜன.31 சபரிமலைக் கோயில் தங்கத் திருட்டு வழக்கில் நடிகர் ஜெயராமிடம் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது. இந்தியாவிலிருந்து ரூ.10,000 கோடி கடனுடன் தப்பி ஓடிய தொழிலதிபர் விஜய் மல்லையா, 1998-1999 காலகட்டத்தில் சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குத் 32 கிலோ தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களை வழங்கினார். அந்தத் தங்கத்தைப் பயன்படுத்தி கோயிலின் கருவறைக் கதவுகள், துவார பாலகர் சிலைகளுக்குத் தங்கத் தகடுகள் வேயப்பட்டன.

இந்த நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கோயிலில் ஆய்வு செய்யப்பட்டது. அந்த ஆய்வின் முடிவில் தங்கம் குறைந்து – அந்தத் தங்கத்துக்குப் பதிலாக செப்புத் தகடுகள் வைத்து மோசடி செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த கேரள உயர் நீதிமன்றம், ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்தது. அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், இந்த மோசடியின் முக்கிய மூளையாக செயல்பட்ட முன்னாள் அர்ச்சகர் உன்னி கிருஷ்ணன், திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டின் முன்னாள் அதிகாரி முராரி பாபு, 2019 ஆம் ஆண்டின் தேவஸ்தம் போர்டின் தலைவர் ஏ.பத்மகுமார் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இந்த வழக்கு தொடர்பாக அம லாக்கத்துறை தமிழ்நாடு, கேரளா, கருநாடகா என 21 இடங்களில் சோதனை நடத்தியது. இதற்கிடையில், நடிகர் ஜெயராமின் வீட்டில் தங்கத் தகடுகள் காட்சிப்படுத்தப்பட்டு, பூஜைக்காக வைக்கப்பட்டிருந்த படங்கள் வெளியாகியிருந்தன. அதைத் தொடர்ந்து, தங்கத் திருட்டு தொடர்பான செய்திகள் வெளியானபோது, ​​அந்தத் தங்கத் தகடுகள் தனது வீட்டிற்குக் கொண்டுவரப்பட்டதை நடிகர் ஜெயராம் உறுதிப்படுத்தியிருந்தார்.

இந்த நிலையில், சிறப்பு புலனாய்வுக் குழு நடிகர் ஜெயராமிடம் விசாரணையை தொடங்கியிருக்கிறது. சென்னை அசோக் நகரில் இருக்கும் ஜெயராம் இல்லத்தில் நடத்தப்பட்ட விசாரணையின்போது நடிகர் ஜெயராமன் வாக்குமூலம் அளித்தி ருக்கிறார். அதில், “கடந்த 40 ஆண்டு களாக ஒவ்வொரு ஆண்டும் சபரிமலைக்குச் சென்று வருகிறேன். அந்தப் பயணங்க ளின் மூலமாகவே அர்ச்சகர் உன்னி கிருஷ்ணனுடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் மூலமாகவே எனக்கு கோவர்தனன் அறிமுகமானார். சபரிமலை கருவறைக்காகப் புதிதாக செய்யப்பட்ட தங்கத் தகடுகளை வீட்டில் வைத்து பூஜை செய்தால், செல்வம் பெருகும் என உன்னிகிருஷ்ணன் கூறினார். அதன் அடிப்படையிலேயே அந்த பூஜை நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து கோவிலில் நடைபெற்ற பூஜைகளிலும் நான் கலந்துகொண்டேன்’’ எனக் குறிப்பிட்டி ருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *