சென்னை, ஏப். 20- மீன்வள பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரை அரசே நியமிக்கும் சட்டத் திருத்த மசோதா உள்ளிட்ட 3 சட்ட திருத்தங்கள் சட்டப் பேரவையில் நேற்று (19.4.2023) தாக்கல் செய்யப்பட்டன.
தமிழ்நாட்டில் ஏற்கெனவே சென்னை பல்கலைக்கழகம் உள் ளிட்ட 12 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை ஆளுநருக்கு பதில் தமிழ்நாடு அரசே நியமிக்கும் வகையில் சட்டத்திருத்த மசோ தாக்கள் சட்டப்பேரவையில் கடந்தாண்டு நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதாக்கள் ஆளுநருக்கு அனுப்பப்பட்டு நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், மீன்வள பல் கலைக் கழகத்தின் துணைவேந் தரையும் அரசே நியமிக்கும் வகையில் அந்த பல்கலைக் கழகத் துக்கான சட்டத்தை திருத்தும் மசோதாவை சட்டப்பேரவையில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ் ணன் நேற்று (19.4.2023) தாக்கல் செய்தார். இந்த மசோதாவை, அறி முக நிலையிலேயே எதிர்ப்பதாக அ.தி.மு.க.வின் அக்ரி கிருஷ்ண மூர்த்தி மற்றும் பா.ஜ.க.வின் நயினார் நாகேந்திரன் ஆகியோர் தெரிவித்தனர். இருப்பினும், சட் டத் திருத்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மசோதா நாளை (21.4.2023) ஆய்வு செய்யப் பட்டு நிறைவேற் றப்பட உள்ளது. அதேபோல், தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவ னத்தின் பதிவுச் சான்று வழங்குதல் உள்ளிட்ட நோக்கங்களுக்கான திருத்தச்சட்ட முன்வடிவை அமைச்சர் சி.வி.கணேசன் அறிமுகம் செய்தார்.
பழைமையான சட்டங்கள் நீக்கம்:
மேலும், தமிழ்நாடு அரசால் கடந்த 1976 முதல் 2017ஆம் ஆண்டு வரை பல்வேறு துறைக ளின்கீழ், கொண்டுவரப்பட்ட 175 சட்டங்கள், திருத்தச் சட்டங்கள் தற்போதைய சூழலில் பழைமையா னதாக, வழக்கத்தில் இல்லாமல் இருக்கும் நிலையில் உள்ளதால் அவற்றை நீக்கும் சட்ட முன் வடிவை சட்டஅமைச்சர் எஸ்.ரகு பதி கொண்டுவந்தார்.
இவையும் நாளை ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளன.